‘எது செய்தாலும் அதில் தனித்துவம் இருக்கணும்’ என நினைக்கும் படைப்பாளி சங்ககிரி ராஜ்குமார். அவரது மிகப்பெரிய முயற்சி. இந்த ஒன் படம். படத்தில் கேமராவிற்கு முன்வரும் ஆட்கள் எல்லோரும் அவர் ஒருவரே.. படத்தில் கேமராவிற்கு பின்னால் இருக்கும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் அவர் ஒருவரே! வெவ்வேறு திறமைகள் உள்ள நான்கு இளைஞர்கள் தங்களுக்கு வழங்கவுள்ள விருதுகளை வாங்கச் செல்கிறார்கள். அது கொரோனா கிருமி தொற்று அறிவிக்கப்பட்ட காலம். அதை பொருட்படுத்தாமல் விருது வாங்க செல்லும் பாதையில் சில பல தடைகள் ஏற்பட்டு ஒரு முக்கியமான ஆய்வுக் கூடத்த்குக்கு சென்று விடுகிறார்கள். அங்கு அவர்கள் செய்யும் ஒரு காரியத்தால், உலகில் அனைவரும் மறைந்து விடுகிறார்கள். இதன் தீர்வு என்ன? என்பதே படத்தின் கதை.
நடிகராக அனைத்து கதாபாத்திரத்தில் வரும் சங்கரகிரி ராஜ்குமார் சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு கதாபாத்திரத்துக்குமான வித்தியாசத்தை அரிதாரப்பூச்சில் மட்டுமில்லாது உடல் மொழியாலும் தன் தனித்துவ நடிப்பைக் காட்டி அசத்தியுள்ளார். ஒரு திரைப்படத்துக்கு தேவையான அனைத்து வேலைகளையும் ராஜ்குமார் யாருடைய உதவியுமின்றி தனி ஒரு மனிதனாக ஒரு முழுப்படத்தையும் வெளியாக்கியுள்ளார். திரைக்கதை இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கலாம். இருந்தாலும் இப்படி ஒரேயொருவர் எல்லாவற்றையும் செய்ய முடியுமா? என்ற வியப்பு படம் முடியும் வரை நமக்குள் எழுந்துகொண்டே இருக்கிறது அந்த வியப்புக்காக மட்டுமே அவரை வரவேற்கலாம்! மேலும் படம் முன் நிறுத்தும் பொதுமை நிறைந்த கருத்துக்கும் கூடுதல் வாழ்த்துக்களை பெறுகிறார். கடைசி 5 நிமிடம் இந்தப்படத்தை அவர் தனியாளாக எடுத்து நடித்ததை காணொளியாக காட்டுகிறார். அந்த காணொளியை பார்க்கும் போது கண்கள் கலங்குகின்றன. சினிமாவை உயிராக நேசித்துள்ள இந்த மகத்தான கலைஞன் மாபெரும் வெற்றியடைய வேண்டுமென படம் பார்த்த அனைவரும் மனதார வாழ்த்த்கினார்கள்

