புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’

காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும் “ பியார்  பிரேமா கல்யாணம்” ஒரு வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. இயக்குநர் இளன், இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*********

சமூக வலைதளங்களில் பிரபலமான இன்ஃப்ளூயன்சர் பவி என்ற கதாபாத்திரத்தில் சான்வீ மேக்னா நடிக்கிறார். திருமணத்திற்குப் பிறகும் தனது பெற்றோர் வீட்டை விட்டுச் செல்ல மறுக்கிறார். அதனால், வழக்கத்திற்கு மாறாக அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டிற்கே குடி பெயர்கிறார். இதன் பின்னர் தொடங்கும் குடும்ப கலாட்டா, கலாச்சார மோதல்கள், உறவுகளின் சிக்கல்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என சிரிப்பும், சிந்தனையும் கலந்த பயணமாக படம் நகர்கிறது. இறுதியில், “சந்தோஷமாக வாழ்வதற்கான விதிகளை மற்றவர்கள் தீர்மானிக்க வேண்டியதில்லை” என்பதை படம் அழகாக எடுத்துரைக்கிறது.