தமிழ் சினிமா நினைவுகளை கொண்டு வரும் “அடடா”பாடல்

தமிழ் ஹிப்ஹாப் இசையின் தனித்துவமான குரல்களாகவும், நீண்டகால நண்பர்களாகவும் விளங்கும் கில்லா கே மற்றும் பால் டப்பா ஒன்றிணைந்து தங்களின் புதிய ‘அடடா’ பாடலை டெஃப் ஜாம் ரெக்கார்டிங்ஸ் இந்தியா மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களின் தனித்துவமான இசைப் பாணியில், உள்ளூர் கலாச்சாரம், நகைச்சுவை மற்றும் தமிழ் மொழியின் தனித்துவத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும், இந்தப் பாடல் மூலம் தமிழ் கலாச்சாரத்தை சமகால ஹிப்-ஹாப்புடன் கொண்டாடுகின்றனர். கூர்மையான வரிகள், மனதில் பதியும் ஹூக்ஸ் மற்றும் துடிப்பான இசை ஆகியவற்றுடன் உருவாகியுள்ள ‘அடடா’, தமிழ் அடையாளம், சினிமாவின் பழைய நினைவுகள் மற்றும் தொடர்ந்து பரிணமித்து வரும் பிராந்திய ராப் இசை ஆகியவற்றை உற்சாகமாகக் கொண்டாடுகிறது.******

புகழ்பெற்ற தமிழ் திரைப்படமான ‘தில்லானா மோகனாம்பாள்’ திரைப்படத்திலிருந்து உருவாகியுள்ள ‘அடடா’, அந்தப் படத்தின் பிரபலமான காட்சியமைப்பை இன்றைய தலைமுறைக்கேற்ற வகையில் மாற்றி வடிவமைத்துள்ளது. பாடலின் இசை வீடியோவில் பாரம்பரிய கச்சேரி அரங்கம், துடிப்பான ராப் அரங்கமாக மாற்றப்பட்டுள்ளது. பாரம்பரிய காட்சியமைப்புகள் நவீன ஹிப்ஹாப் பாணியுடன் இணைகின்றன. குறும்புத்தனமான கதை சொல்லல், நகைச்சுவை கலந்த பஞ்ச் வரிகள் மற்றும் கில்லா கே, பால் டப்பா இருவருக்குமிடையேயான இயல்பான கெமிஸ்ட்ரி ஆகியவை பாடலுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. தமிழ் கலாச்சாரத்தை புதிய மற்றும் துடிப்பான இசை மூலம் கொண்டாடும் இந்தப் பாடல், தமிழ் பாரம்பரியத்தை இன்றைய கலாச்சார உரையாடலுக்குள் புதிய கோணத்தில் கொண்டு வருகிறது. பாரம்பரியத்தையும் நவீன ராப் இசையையும் இணைக்கும் இந்த இசை மற்றும் காட்சியமைப்பு, தமிழ் மரபுக்கு மரியாதை செலுத்துவதோடு, அதை இன்றைய தலைமுறைக்குள் தன்னம்பிக்கையுடன் எடுத்துச் செல்கிறது.