‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆக.21ல் வெளியீடு

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தேறியது. காதல், குடும்பம், நகைச்சுவை மற்றும் திருமண வாழ்க்கையின் எதிர்பாராத திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் ஒளிபரப்பாகிறது. இப்படத்தில் இயக்குநர் இளன் கதாநாயகனாக நடிக்க சான்வீ மேக்னா கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன், டீப்ஸ் சைரஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.