சென்னையில் மாநில அளவிலான சிலம்பப்போட்டி

சென்னையில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி நடந்தது. இப்போட்டிக்கு மாநில அளவிலிருந்து 500 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கு பெற்றார்கள். அவர்களை ஊக்கப்படுத்தும் நல் நோக்கத்தோடு நடைபெற்ற போட்டியில், சிலம்ப விளையாட்டுக் கலைகளிலிருந்து வரையறுக்கப்பட்ட, சிலம்ப ஒற்றைக்கம்பு தனித்திறமை போட்டி, இரட்டை கம்பு தனித்திறமை போட்டி, சிலம்ப சண்டை. தொடு முறை போட்டியாக நடைபெற்றது. இப்போட்டியை போட்டியாளருடைய அணிவகுப்பு மரியாதை ஏற்று, முதல் போட்டியை துவக்கி வாழ்த்துரை வழங்கினார் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் க.தேசிங். இப்போட்டிக்கு அகில இந்திய சிலம்பம் பிரிமியர் லீக் 7-7 குழு விளையாட்டு சங்கத் தலைவர் ஜெ.குருஏழுமலை தலைமை தாங்கினார்.

முன்னிலை, திரு.G. தனபால் அவர்கள், திரு.S. லிங்கராஜ் அவர்கள். திரு.L. துரைச்சாமி அவர்கள். வரவேற்பு வாழ்த்துரை, சிலம்ப ஜாம்பவான், அகத்தியா அ ஞானம் அவர்கள். போட்டியாளருடைய அணிவகுப்பு மரியாதை ஏற்று, முதல் போட்டியை துவக்கி வாழ்த்துரை வழங்கியவர், திரு.K.தேசிங் அவர்கள். வழக்கறிஞர், நோட்டரி பப்ளிக், உறுதிமொழி ஆணையர் உயர் நீதிமன்றம், சென்னை. ஆடவர் தொடும் முறை போட்டியை துவக்கி வைத்து சிறப்புரை வழங்கியவர், திரு.கூ.பீ ஜெயின். அவர்கள். 94 வது மாமன்ற உறுப்பினர், 8 வது மண்டல குழு தலைவர். நன்றி கூறி வாழ்த்துரை வழங்கியவர். திரு.C. அருள் விக்ரம் ஆரோக்கிய ராஜ் அவர்கள்.

மேலும் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து வாழ்த்துரை வழங்கியவர்கள்,திரு.Dr.Pபுல்கானி அவர்கள். தலைவர். சென்னை மாவட்ட ஊசூ சங்கம். திரு.C.P. இராஜன் அவர்கள். பொதுச் செயலாளர், தமிழ்நாடு பிரஸ் அண்ட் மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன். திரு. கராத்தே கட்டா மாரியப்பன் அவர்கள், திரு.M.K. சசிகுமார் அவர்கள். திரு.R. கார்த்திக் பாலாஜி அவர்கள். திரு.P.நந்தகுமார் அவர்கள். K.சுந்தரலிங்கம் அவர்கள், திருமதி.தீபா முத்துக்குமார் அவர்கள். திரு.GLK. ராகவ் அவர்கள். மேலும் பலர் கலந்து கொண்டு சிலம்ப விளையாட்டு கலையையும், அதன் பயன்களையும் விளக்கி வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள் கூறி சிறப்பு உரையாற்றினார்கள்