கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் தயாரிக்கும் கிங் அண்ட் குயின்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். நாயகியாக ஆதியா பிரசாத் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் இளவரசு, பிரகதி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், சுனில், படூர் ரமேஷ்,சங்கீதா, அஞ்சலி நாயர், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, நிகிலா ஷங்கர், மகிழ் திருமேனி மற்றும் பலர் நடிக்கிறார்கள். இத்திரைப்படதை மணிசேயோன் இயக்குகிறார்.. கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் திரு இயக்கத்தில் வாணவேடிக்கை படத்தின் படப்பிடிப்பு மற்றும் கிங் அண்ட் குயின்ஸ் என இரண்டு படங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..*******
விறுவிறுப்பான படப்பிடிப்பில் கிங் அண்ட் குயின்ஸ்
