பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தில் கே. மணிகண்டன் நடிக்கிறார். லட்சியம், மன உறுதி, தடைகளை கடந்து முன்னேறும் துணிச்சல் ஆகியவை ‘மக்கள் காவலன்’ படத்தின் மைய புள்ளியாகும். நடிகரின் சொந்த திரைப்பயணமும் இதனை பிரதிபலிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் சந்தோஷ் குமார் எழுதி, இயக்கியிருக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படம் – கண்ணியத்துடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனின் கதையை உரக்க பேசுகிறது. ஆனால் ஊழல் நிறைந்த ஒரு அமைப்பு… அவரை சரணடைவது அல்லது எதிர்த்து போராடுவது என்ற இரண்டு தேர்வுகளுக்குள் உந்தித் தள்ளுகிறது. ஒரு தனி மனிதனின் உயிர் வாழ்வதற்கான போராட்டமாக தொடங்கும் இது… மிகப்பெரிய பரிமாணத்தை எட்டுகிறது.*******
‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் ‘மக்கள் காவலன்’. பிரம்மாண்டமான திரைப்படங்களை உருவாக்கும் பிர்லா ஸ்டுடியோஸின் லட்சியத்தையும்…. உணர்வு பூர்வமான மற்றும் சமூக பின்னணி கொண்ட சிறந்த சினிமா கதைகளை உருவாக்கும் நீலம் ஸ்டுடியோஸின் அர்ப்பணிப்பையும்… இந்த திரைப்படம் ஒன்றிணைக்கிறது.
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ ஆகிய திரைப்படங்களின் வணிக ரீதியான வெற்றியை தொடர்ந்து கே. மணிகண்டன் நடிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. அவரின் தொடர் வெற்றிகள் தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய மற்றும் அதிகம் விரும்பப்படும் முன்னணி நடிகர்களில் ஒருவராக அவரை உயர்த்தியுள்ளது. ‘மக்கள் காவலன்’ படத்தின் மூலம் மணிகண்டன் முதன்முறையாக ஒரு அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

