‘ஹைக்கூ’ திரைப்படம் அக்.23ல் வெளியீடு

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: “தளபதியுடைய பல படங்கள் ஓடிய திரையில் என்னுடைய தம்பி ஏகன் படம் வெளியாகவிருப்பதும் மகிழ்ச்சி. கடின உழைப்பாளி ஏகன். இயக்குநர், படக்குழு மற்றும் இன்றைய நாயகன் சித்து என எல்லோருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். நல்ல கருத்துகளோடு பொழுதுபோக்கு அம்சமும் சேர்ந்திருக்கும் படங்கள் சமீபத்தில் வெளியாகவில்லை. ‘ஹைக்கூ’ அந்த குறையை போக்கும். படம் மிகப்பெரும் வெற்றி அடைய வாழ்த்துக்கள்”.என்றார்.*********

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, “இரண்டு கதாபாத்திரங்களுக்கிடையே ஆன மனஒற்றுமைகளையும் வேற்றுமைகளையும் துல்லியமாக படமாக்கி இருக்கிறார்கள். அதற்கு சித்து அற்புதமான இசை கொடுத்திருக்கிறார். பாடல்களும் சிறப்பாக உள்ளது. படம் மிகப்பெரும் வெற்றியடையும். ஏகன் பெரிய இடத்தை அடைவார்”.

இயக்குநர் யுவராஜ், ” பெரிதாக எந்த கண்டிஷனும் சொல்லாத தயாரிப்பாளர் அருள் சார். அவருக்கு நன்றி. ஒத்துழைப்பு கொடுத்த படக்குழுவினருக்கு நன்றி. சித்துவின் ஆல்பம் சிறப்பாக வந்துள்ளது. என்னை நம்பி நான் சொன்னதை எல்லாம் செய்த ஏகன், ஃபெமினா, ஸ்ரீதேவிக்கு நன்றி”.