கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் காதலும் நகைச்சுவையும் கலந்த கலகலப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகளை தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கி தனது முதல் படைப்பாக ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வரும் டிசம்பர் 24 அன்று வெளியாகவுள்ள இப்படத்தை தமிழ்நாடு முழுவதும் ஏ ஜி எஸ் சினிமாஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தை ‘கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ளார். அன்னா பென் நாயகியாக நடிக்க, கே.எஸ். ரவிகுமார், பொன்வண்ணன், விஜி சந்திரசேகர், சித்தப்பு சரவணன், விநோதினி வைத்தியநாதன், லொள்ளு சபா மனோகரன், மோனிஷா பிளஸ்ஸி, வாட்ஸப் மணி, நக்கலைட்ஸ் ரஞ்சித் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.*********
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநரும் நாயகனுமான கிஷோர் ராஜ்குமார், “வெறும் 29 நாட்களில் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படப்பிடிப்பை முடித்துள்ளோம். குண்டாக இருப்பவர்களை நகைச்சுவை வேடங்களில் சித்தரித்து நிறைய படங்கள் வந்துள்ள நிலையில், உடல் எடை அதிகமாகக் கொண்ட பாத்திரத்தை நாயகனாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் இது. அந்த வேடத்தில் நானே நடிப்பது மகிழ்ச்சி. அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை கலகலப்புக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும்,” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கையாண்டுள்ளார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய ‘நாய் சேகர்’ படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான பாடல் ஒன்றுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்குநர் ஆவார். ஆடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு – எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.
நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘கோயம்புத்தூர் மாப்பிள்ளை’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

