நடிகர் பிரபாஸ் – இயக்குநர் ஹனு ராகவபூடி – மைத்ரி மூவி மேக்கர்ஸ் – டி-சீரிஸ் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ‘ஃபௌஜி’ திரைப்படத்திலிருந்து, ‘ஃபைல் நம்பர் 25’ என்ற பெயரில் சக்திவாய்ந்த வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட முன்னோட்டம் வெளியாகியுள்ளது.இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி தொடர்பான பதாகைகள் ஏற்கெனவே ரசிகர்களிடையே வலுவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு, தயாரிப்பாளர்கள் ‘ஃபைல் நம்பர் 25’ எனும் சக்திவாய்ந்த புதிய முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இது அவரது கதாபாத்திரத்தின் அடையாளம், புத்திசாலித்தனம், அசாதாரணமான நோக்கம் ஆகியவற்றைப் பற்றிய சுவாரசியமான விவரங்களை வெளிப்படுத்துகிறது. இப்படத்தில் பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்கரபோர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்**********
தொழில்நுட்பக் குழு: எழுத்து மற்றும் இயக்கம்: ஹனு ராகவபூடி தயாரிப்பு நிறுவனம்: மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்குபவர்கள்: குல்சன் குமார், பூஷன் குமார் மற்றும் டி-சீரிஸ் தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, Y. ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஒளிப்பதிவு: சுதீப் சட்டர்ஜி ISC இசை: விஷால் சந்திரசேகர் தயாரிப்பு வடிவமைப்பு: அனில் விலாஸ் ஜாதவ் படத்தொகுப்பு: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் VFX: R. C. கமலக்கண்ணன் நடன இயக்குநர்: பிரேம் ரக்ஷித் ஆடை வடிவமைப்பாளர்கள்: ஷீத்தல் இக்பால் சர்மா, டி. விஜய் பாஸ்கர் மக்கள் தொடர்பு: யுவராஜ்

