இந்திய அரசின் உள்துறை அமைச்சகம், காவல்துறையில் சிறந்த தொழில் முறைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ள நாட்டின் காவல்துறை அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில், “கேந்திரிய கிருஹமந்திரி தக்ஷதா பதக் 2026″ என்ற உயரிய விருதை அறிவித்துள்ளது.

சர்தார் பட்டேல் நிலை நிறுத்தியநேர்மை, உறுதி, தன்னலமற்ற சேவை, நாட்டுப்பணிக்கான ஈடுபாடு போன்ற மதிப்புகளுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. 2026ஆம் ஆண்டிற்கான இப்பெருமைமிக்க விருதிற்கு, புலன் விசாரணையில் திறம்பட செயல்பட்ட தமிழ்நாடு காவல்துறையை சார்ந்த அதிகாரிகள் மதுகுமாரி, இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர் தளவாய், மற்றும் வி.சதீஷ்குமார், இ.கா.ப, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
-தங்க முகையதீன்-

