’சேரநாட்டு யானை தந்தம்’ டிச.4ல் வெளியீடு

தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சேரநாட்டு யானை தந்தம்’. எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ராஜசிம்மன், பாண்டி அக்கா, விஜயன் தியாகராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.  ஏ.சி.குமரேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கணேஷ் குமார்.டி படத்தொகுப்பு செய்ய, யுகபாரதி மற்றும் தோழன் பாடல்கள் எழுதியுள்ளனர்.  பி.ஆர்.ஓ-வாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். வையாபுரி குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, அஸ்வசக்தி முத்து பழனிசாமி, லத்திகா புரொடக்‌ஷன்ஸ் சசி, ஏ.கே.கோவிந்தராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.********

வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா டிசம்பர் 21 ஆம் தேதி, சென்னை பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ஓ விஜயமுரளி, விநியோகஸ்தர் ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.