இயக்குநர் நாகராஜ் தற்போது “ஆகாயம்” திரைப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். ஸ்ரீராம் கார்த்திக் இப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக ஆலிஷா மிராணி அறிமுகமாகிறார். மேலும் ஷீலா, கனிகா, சந்தான பாரதி, ஜெயபிரகாஷ், கிரி துவாரகிஷ், ஸ்ரீ தேவகிருஷ்ணன், இந்துமதி மணிகண்டன், தீபா, சஞ்சனா நமீதாஸ், ரோசாரி, ரைட்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் நல்லமுத்து, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்********
படம் பற்றி இயக்குனர் தினம்தோறும் நாகராஜ் பகிர்ந்தவை: “கதையாகச் சொன்னால் ‘ஆகாயம்’ குடிக்கு எதிரான படம். ஆனால், அதை உயிர்த்துடிப்பான ஒரு வாழ்க்கையோடு சொல்லியிருக்கிறேன். தவிர இதில் அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து வந்திருக்கின்றன. படங்கள் அனுபவங்களைத் தந்து, வாழ்க்கைக்குள் நுழைந்து நல் உணர்வுகளைத் தர வேண்டும். அப்படி ஒரு சினிமா செய்வதுதான் நமக்கு கௌரவம். நான் அதைத்தான் செய்திருக்கிறேன். ‘ஆகாயம்’ அப்படியான படம். ஒரு நல்ல நடைமுறை வாழ்க்கையைப் பாசத்தோடும் பரிதவிப்போடும் சொல்லியிருக்கிறேன் என்றார் இயக்குனர் தினந்தோறும் நாகராஜ். விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

