சந்தீப் ரெட்டி வங்கா, ரன்பீர் கபூர் கூட்டணியின் “அனிமல்” திரைப்படம் டிச.1ல் வெளியாகிறது

இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார் டிசீரிஸ், முராத் கெடானி சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வங்கா பத்ரகாளி பிக்சர்ஸ், இணைந்து வழங்கும்அனிமல்”  திரைப்படம்,  டிசம்பர் 1, 2023 அன்று தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.  இது குறித்து  நடிகர் ரன்பீர் கபூர் கூறியதாவது..  மீண்டும் சென்னையில் உங்களைச் சந்திப்பது மகிழ்ச்சி. நான் இங்கு ஷீட் செய்திருக்கிறேன். எனக்குச் சென்னை ரொம்பப் பிடிக்கும். இந்தப்படம் ஆரம்பிக்கும் போதே சந்தீப் இது ரீமேக் இல்லை இது ஒரிஜினல் ஆனால் மிக இண்டென்ஸான படம் என்றார். கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும்ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கதாபாத்திரத்திற்குத் தயாராவார்கள் என்னைப் பொறுத்தவரை நான் இயக்குநரோடு அதிக நேரம் செலவிடுவேன். **********

இயக்குநருக்கும் எனக்கும் உள்ள புரிதல் தான் படம் நன்றாக வரக் காரணம் என்றுநினைக்கிறேன். அந்த வகையில் சந்தீப் மிக ஓப்பனாக இருந்தார். அவரிடம் தெளிவான பார்வை இருந்தது. நான் சந்தித்ததில் மிக ஒரிஜினலான டைரக்டர்களில் ஒருவர். தாய்ப்பாசம் குறித்து நிறைய படம் வந்துள்ளது, ஆனால் தந்தைப்பாசம் பற்றி படம் அதிகம் வந்ததில்லை.  எப்படி இந்தக்கதை? ஏன் இந்தக்கதை? என்றுஅவரிடம் கேட்டேன். ஒருவன் தான் பாசம் வைத்திருப்பவர்களைக் காப்பாற்ற எந்த எல்லை வரை செல்வான், அவனைக் கொண்டு செல்லும் அந்த புள்ளி எது, என்பதுதான் இந்தப்படம் என்றார். அதை அட்டகாசமாகக்காட்சிப்படுத்தியுள்ளார். அனிமல் எப்போதும் தங்கள் உள்ளுணர்வுப்படி செயல்படும்  இந்த ஹீரோவும்அப்படித்தான். படம் பார்க்கும் போது, இந்த  டைட்டில் பொருத்தமானது என்பதை உணர்வீர்கள். இப்போதுபான் இந்தியப் படங்கள் வந்து கலக்குவது மகிழ்ச்சி. இங்கு ஜவான் ஓடுகிறது, இந்தியில் ஜெயிலர் விக்ரம்ஓடுகிறது. மொத்தமாக நாங்கள் எண்டர்டெயின் செய்யத் தான் படம் எடுக்கிறோம் அதை மக்கள் ரசிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப்படத்தை டிசம்பர் 1 தியேட்டரில் பார்த்து ஆதரவு அளியுங்கள் நன்றி

நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது.. இந்தப்படம் மிக வித்தியாசமான அனுபவம்.  நானாகக் கதைகள் தேடிப்போவதில்லை, வரும் கதைகளைக்கேட்டுப் பிடிக்கும் கதைகளில் நடிக்கிறேன் அவ்வளவு தான், இந்தப்படம் மிகவும் இண்டென்ஸான படம் . உங்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும். தமிழ், தெலுங்கு, இந்தி இண்டஸ்ட்ரிக்கு பெரிய  வித்தியாசம் இல்லை. இந்தப்படம் பொறுத்தவரை  நான் செய்ததில் மிகவும் அழுத்தமான  கேரக்டர் இந்தப்படம் தான்.  எந்தசுகர்கோட்டும் இல்லாத மிக ஒரிஜினலான கேரக்டர் இது.  நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். ரன்பீருடன்வேலை பார்த்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவருக்கு நன்றி. என்றார்.