“ஹேப்பி ராஜ்” மார்ச் 27ல் திரைக்கு வதுகிறது

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமான ஹேப்பி ராஜ் வரும் மார்ச் 27ல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. நேர்மறை உணர்வுகள், இளமை, உற்சாகம் மற்றும் மனதை வருடும் உணர்ச்சிகளால் நிரம்பிய ஒரு முழுமையான திரை அனுபவத்தை இந்த படம் ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஜெயவரதன் தயாரிக்கும் இந்தப் படம் பியாண்ட் பிக்சர்ஸ்  நிறுவனத்தின் முதல் தயாரிப்பாகும். மேலும் ஜெயகாந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். இயக்குனர் மரியா இளஞ்செழியன் இயக்கியுள்ள இந்தப் படம், நம்பிக்கை, உறவுகள் மற்றும் சுவாரஸ்யமான எளிய கதை சொல்லும் முறையால் அனைத்து வயதினரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜார்ஜ் மரியான் , பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.********

படத்தின் தலைப்புக்கேற்ப Happy Raj ஆக G. V. பிரகாஷ் குமார் நடித்துள்ளார். தனது இயல்பான நடிப்பின் மூலம் அவர் இந்தக் கதாபாத்திரத்தை உயிர்ப்பித்துள்ளார். கதாநாயகியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார்; அவரது நடிப்பு கதைக்கு எமோஷனல் வேலியூவை இன்னும் கூட்டுகிறது. மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழ் திரையுலகிற்கு அப்பாஸ் மீண்டும் நடிக்க வருவது இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தொழில்நுட்பக் குழுவில், ஒளிப்பதிவை மதன் கிறிஸ்டோபர், படத்தொகுப்பை RK செல்வா, கலை இயக்கத்தை குமார் கங்கப்பா, ஆடை வடிவமைப்பை பிரவீன் ராஜா ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.

இசையை ஜஸ்டின் பிரபாகரன் அமைத்துள்ளார். குறிப்பாக “ஆடினே இருப்பேன்” என்ற முதல் பாடல் இளைஞர்களிடையே ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், Happy Raj மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் ரசிகர்களை சந்திக்க தயாராக உள்ளது. புத்துணர்ச்சியான நடிப்புகள், உற்சாகமான இசை மற்றும் மனதை மகிழ்விக்கும் கதை ஆகியவற்றுடன் குடும்பங்களுக்கும் இளைஞர்களுக்கும் ஒரு கொண்டாட்டமான திரை அனுபவத்தை வழங்கும் படமாக இது இருக்கும். நேர்மறையும் மகிழ்ச்சியும் உள்ள ஒரு திரைப்படத்தைக் கொண்டாட தயாராகுங்கள். “Happy Raj” மார்ச் 27 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்!