ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி.

சென்னை ஜூன். 14.:- மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 118வது வட்டம், புதுப்பேட்டை கார்டன் தெருவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு …

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி. Read More

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில் பங்கு கொண்ட, பத்ம பூசன் விருது பெற்ற, சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).*

கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் (Kariamanickam Srinivasa Krishnan) K.S.கிருட்டிணன்) டிசம்பர் 4, 1898ல் தமிழ்நாட்டில், விருதுநகர் மாவட்டத்தில் வத்திராயிருப்பு அருகில் அமைந்துள்ள விழுப்பனூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை வேளாண்மைத் தொழில் செய்துகொண்டிருந்தார். அவர் தமிழிலும் சமசுக்கிருதத்திலும் ஆழமான புலமையும் …

சர். சி. வி. இராமன் உடன் இணைந்து ஒளிச்சிதறல் விளைவுகளில் இராமன் விளைவு கண்டுபிடிப்பில் பங்கு கொண்ட, பத்ம பூசன் விருது பெற்ற, சர் கரியமாணிக்கம் சீனிவாச கிருட்டிணன் நினைவு நாள் இன்று (ஜூன் 14, 1961).* Read More

அன்புமணி அதிமுக தலைவர்களைப விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ளமுடியாதென்கிறார் புகழேந்தி

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தவறாக பேசினால் அதனை பொறுத்துக்கொள்ள முடியாது என அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது, “அதிமுக …

அன்புமணி அதிமுக தலைவர்களைப விமர்சிப்பதை பொறுத்துக்கொள்ளமுடியாதென்கிறார் புகழேந்தி Read More

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசுமேற்கொண்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில்உள்ளது. நாளை (14.6.2021) முதல் தமிழகத்தில் சென்னை உட்பட27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கஉத்தரவிடப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையாளர்மற்றும் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர்திரு.எல்.சுப்ரமணியன், இ.ஆ.ப., தலைமையில், காவல் அதிகாரிகள்மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுடன் இன்று (13.4.2021) மாலை காவல் ஆணையரகத்தில் ஒருங்கிணைப்பு கலந்தாய்புமேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டமைப்புகளுடன் கடைகள் திறந்துநடத்திட ஆலோசிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் டாஸ்மாக் கடைகளில் காவல்துறையினர்மூலம் தகுந்த தடுப்புகள் கொண்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யவும், பொதுமக்களை வரிசைபடுத்தவும், சமூக இடைவெளிகடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகடைபிடிக்காமல் வரும் நபர்களுக்கு, மதுபான வகைகள் வழங்கவேண்டாம் எனவும், ஒலி பெருக்கி வசதி, சில மீட்டர் தூரத்தில்பந்தல் அமைத்து மதுபானங்கள் வாங்க வருபவர்களைவரிசைபடுத்துதல் குறித்தும், நடவடிக்கை எடுக்கஆலோசிக்கப்பட்டது.  மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர்மற்றும் காவல் அதிகாரிகளுடன் இன்று (13.6.2021) மாலைசென்னை, 1.பெரியமேடு, ஈ.வெ.ரா.சாலை (எவரெஸ்டு ஓட்டல்எதிரில்), 2.எழும்பூர், வான்னல்ஸ் சாலை, (ஆல்பட் திரையரங்கம்அருகில்), 3. ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில்அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்றுகட்டமைப்புகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அங்குமேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள்மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி விற்பனை செய்ய வேண்டும் எனஅறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, டாஸ்மாக் பொது மேலாளர்திரு.சுகுமாறன், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) என்.கண்ணன், இ.கா.ப., கிழக்கு மண்டல இணைஆணையாளர் எஸ்.ரஜேந்திரன், இ.கா.ப., துணைஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார் Read More

மூடியது மூடியதாகவே இருக்கட்டும்! மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது! மகளிர் ஆயம் தலைவர் ம. இலெட்சுமி வலியுறுத்தல்

கொரோனா பெருந்தொற்றின் இராண்டாவது அலை மக்களைக் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ள இச்சூழலில், தி.மு.க. அரசு ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தி டாஸ்மாக் மதுக்கடைகளை வரும் 15.06.2021 முதல் திறக்கப்போவதாக அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது. பெருந்தொற்று பரவிவிடக் கூடும் என தேநீர் கடைகளைக் கூடத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ள …

மூடியது மூடியதாகவே இருக்கட்டும்! மதுக்கடைகளைத் திறக்கக்கூடாது! மகளிர் ஆயம் தலைவர் ம. இலெட்சுமி வலியுறுத்தல் Read More

கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின்பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31-5-2021 முதல்நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்லபலனை அளித்துள்ளது. இந்நிலையில், மக்களின்வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்றநோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள்வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள்மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டாமாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில்தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பல்வேறுதரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள்பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின்  இதர 27 மாவட்டங்களில் 14-6-2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும்வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல்முறையில்  தேநீர் வாங்க வரும் பொது மக்கள்பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச்செல்லுமாறும், நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத்தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதிஇல்லை.  மேலும், பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதிஅளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள்விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவைஇயங்கலாம். இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும்அனுமதிக்கப்படுகிறது. பொது மக்களின் நலன் கருதி, அரசுஅலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும்சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14-6-2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது.  கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவேஅனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்,அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காதநிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம்செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில்கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள்50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதிஅளிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றால் பல மாதங்கள் மூடிக்கிடந்த டீ கடைகள் மீண்டும் திறப்பு Read More

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில்புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம்பிடித்துள்ளது

QSஉலக பல்கலைக்கழக தரவரிசையானது, பல்கலைக்கழகத்தின்  பல முக்கிய பணிகள் – கல்வியாண்டு தேர்ச்சி  விகிதம்/நற்பெயர், பல்கலைக்கழகத்தின் தலைமையின் அணுகுமுறை/அர்ப்பணிப்பு, ஆசிரிய மாணவர் விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச ஆசிரியர்கள் விகிதம் மற்றும் சர்வதேச மாணவர்கள் விகிதம் போன்ற ஆறு கடுமையான செயல்திறன் குறிகாட்டிகளுடன் தரவரிசை பட்டியல்2022 சமீபத்தில் வெளியிட்டது  இதில் புதுவை பல்கலைக்கழகம்  801 முதல் 1000 வகைகளுக்கு (category) இடையில் தரவரிசை பெற்ற …

QS உலக பல்கலைக்கழக தரவரிசையில்புதுவை பல்கலைக்கழகம் முக்கிய இடம்பிடித்துள்ளது Read More

பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் நிற்க வேண்டாமென ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற இயக்குநர் சுரேஷ் காமாட்சி

பெண் போலீசாரின் பெருந்துன்பங்களில் ஒன்று பிரபலங்கள் வரும்போது பாதுகாப்பிற்காக சாலைகளில் நிற்பது. அதிலென்ன இருக்கிறது என சாதாரணமாகக் கடந்து போகும்போது, ஒரு சின்ன சிக்கல் எவ்வளவு பெரிய வலியையும் அவஸ்தையையும் தருகிறது என்பதை மிக மிக அவசரம் படத்தில் சொல்லியிருந்தோம். ரொம்ப …

பெண் போலீசார் சாலையோர பாதுகாப்பில் நிற்க வேண்டாமென ஸ்டாலின் அறிவிப்பை வரவேற்ற இயக்குநர் சுரேஷ் காமாட்சி Read More

அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்

தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு ஊரடங்கு நடவடிக்கைகளில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் சூழலில், வழிபாட்டுத் தலங்களுக்கு தொடர்ந்து கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இத்தகைய பெருந்தொற்று காலத்தில் வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களுக்கு இறைவழிபாடு ஒன்றே மன அமைதியை தரும் …

அனைத்து வழிபாட்டுத்தலங்களையும் திறந்திட எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் Read More

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார்

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதைப்போல, பெண்களும் அர்ச்சகர் ஆவதற்கு விருப்பப்பட்டால் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

பெண்களும் அர்ச்சகராகலாமென அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார் Read More