சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது.

சென்னை, மடிப்பாக்கம், ராமகிருஷ்ணராஜ் நகரைச்சேர்ந்த கீதா, பெ/வ.58, க/பெ.கபிலன் என்பவர் கடந்த19.8.2021 அன்று மாலை, வீட்டினருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் அவரது கழுத்திலிருந்த 7 சவரன் தங்கச்சங்கிலியைபறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து கீதா S-7 மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணைமேற்கொள்ளப்பட்டது. ​​S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவுஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவஇடத்தினருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராபதிவுகளை தீவிரமாக ஆய்வு செய்து, மேற்படி சங்கிலிபறிப்பில் ஈடுபட்ட குற்றவாளிகள் 1. ராஜேஷ் (எ) ராபர்ட், வ/23, த/பெ.வின்சென்ட், எண்.25, ஏரிக்கரை தெரு, ஜமீன்பல்லாவரம், சென்னை, 2.சிவா (எ) சிவசங்கரன், வ/26, த/பெ.ஶ்ரீராம், எண்.64, பத்மாவதிநகர் 2வது குறுக்கு தெரு, கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டம், 3.லியோ (எ) லியோனார்டு ஜேம்ஸ், வ/28, த/பெ.டேனியல்ஜேம்ஸ், எண்.19/40, சிதம்பரம் தெரு, பாரதிபுரம், ராதா நகர், குரோம்பேட்டை, சென்னை, ஆகிய 3 நபர்களை கைதுசெய்தனர்.​ ​​விசாரணையில் குற்றவாளிகள் மூவரும் S-7 மடிப்பாக்கம், S-10 பள்ளிக்கரணை, S-15 சேலையூர், S-6 சங்கர் நகர் மற்றும் S-5 பல்லாவரம் ஆகிய  காவல் நிலையஎல்லைகளில் இருசக்கர வாகனத்தில் சென்று தனியாகநடந்து செல்லும் பெண்களின் தங்கச்சங்கிலிகளைபறித்துக் கொண்டு தப்பியது தெரியவந்தது. அதன்பேரில், குற்றவாளிகளிடமிருந்து 20 சவரன் தங்க நகைகள் மற்றும்குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 டியோ இருசக்கரவாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் விசாரணையில், குற்றவாளி ராஜேஷ் (எ) ராபர்ட்மீது மடிப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற காவல் நிலையஎல்லைகளில் சுமார் 10 செல்போன் பறிப்பு வழக்குகள்உள்ளது தெரியவந்தது. ​​விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் இன்று(29.8.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றஉத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

சங்கிலி பறிப்புகளில் ஈடுபட்ட 1 பழையகுற்றவாளி உட்பட 3 குற்றவாளிகள் கைது. Read More

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இன்று தனது 44வது பிறந்த நாளை  கீழ்ப்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடிகர் விஷால் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், இந்த இல்லம் புனிதமான இடம் என்பதால் பிறந்த நாளன்று இங்கு வந்துள்ளதாகவும் பிறந்த நாளன்று நிறைய நல்லா விசயங்கள் நடப்பதால் …

வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றும் என நம்புவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். Read More

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஷால்

விஷால்* மக்கள் நல இயக்கத்தின் செயலாளர் *ஹரிகிருஷ்ணன்* அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, ஒன்றிய, பகுதி, கிளை வரியாக உள்ள மக்கள் …

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் விஷால் Read More

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்கிறார் கமல்ஹாசன்

தமிழகத்தில் சுமார் 13 லட்சம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராடி வருகின்றனர். நடப்பு நிதியாண்டிற்கான தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள் துறை மானிய …

மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வரவேண்டுமென்கிறார் கமல்ஹாசன் Read More

4 மில்லிய பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளது ” ருத்ர தாண்டவம் ” படத்தின் டிரெய்லர்

G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்” மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி …

4 மில்லிய பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளது ” ருத்ர தாண்டவம் ” படத்தின் டிரெய்லர் Read More

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு

சிக்கலான நேரங்களில் நம்பிக்கை மற்றும் நன்னம்பிக்கை நிறைந்த புதிய அனுபவங்களுக்கான வழிகளை இலக்கியம் அளிக்கிறது’’ என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு கூறினார். “இடங்கள், நிகழ்வுகள் மற்றும் அனுபவங்களை இலக்கிய நூல்கள் மீண்டும் உருவாக்கி,  நாம் நம்மை இழக்கும் உலகுக்குள் மாயமாக …

சிக்கலான நேரங்களில் இலக்கியம் நன்நம்பிக்கையை அளிக்கிறது – வெங்கையா நாயுடு Read More

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, குறுக்கிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள்

முதலமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ‘ஏதோ எங்களை வெளியேற்ற வேண்டுமென்ற எண்ணத்தோடு நீங்கள் அந்தக் கருத்தைச் சொல்கிறீர்களா’ என்ற ஒரு சந்தேகத்தை எழுப்பினார். இந்தத் தீர்மானத்தில்கூட ‘ஒருமனதாக’ என்றுதான் போட்டிருக்கிறோம். நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடுதான் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.  நீங்கள் அந்தத் தீர்மானத்தில் உள்ளவாசகத்தைக்கூடப் பார்க்கலாம். அந்தத் தீர்மானத்தினுடைய வாசகத்தில் ‘ஒருமனதாக நிறைவேற்றப்பட வேண்டும்’ என்றுதான் …

ஒன்றிய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை இரத்து செய்வது தொடர்பான தீர்மானத்தின் மீது ஓ.பன்னீர்செல்வம் பேசியபோது, குறுக்கிட்டு முதல்வர் ஸ்டாலின் அளித்த பதில்கள் Read More

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்தார்

விவசாயிகளுக்கு எதிராக அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வணிகம் ஊக்குவிப்புச் சட்டம், ஒப்பந்த பண்ணைய சட்டம் ஆகிய மூன்று சட்டங்களை ஒன்றிய அரசு நிறைவேற்றியிருந்தது. இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் கடுங்குளிரையும் …

ஒன்றிய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்தார் Read More

ஓபிஎஸ் திரிசங்கு நிலை…

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய எதிர்கட்சித்துணைத்தலைவர் ஓ.பன்னீர் செல்வம், தீர்மானத்தை தன்னால் ஆதரிக்கவோ எதிர்க்கவோ முடியாத நிலையில் உள்ளதாக கூறி “நதியில் வெள்ளம் கரையில் நெருப்பு இரண்டுக்கும் …

ஓபிஎஸ் திரிசங்கு நிலை… Read More

மருத்துவ படிப்பிலும் ஈழப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டுமென முதல்வருக்கு வ.கௌதமன வேண்டுகோள்

தமிழ்நாடு எங்களுடைய தந்தையர் நாடு என்று நம்பி ஓடிவந்து 1983இல் தொடங்கி இன்றுவரை கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாய்  நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஈழத் தமிழர்களுக்கு,  மாண்புமிகு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் 110 விதியின் கீழ் பல நல்ல திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்துள்ளதைத் …

மருத்துவ படிப்பிலும் ஈழப் பிள்ளைகளுக்கு இடமளிக்க வேண்டுமென முதல்வருக்கு வ.கௌதமன வேண்டுகோள் Read More