சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான முறையில், நாட்டை மதரீதியாக பிளவுப்படுத்தும் வகையில் மத்திய பாஜக அரசால் இந்திய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் (சிஏஏ) கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த …

சிஏஏ-வுக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை Read More

தனுஷ் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம்

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ்  எந்தவொரு கதாபாத்திரத்திலும் சிரமமின்றி நடித்து சிறந்து விளங்கும் பன்முக திறமை வாய்ந்தவர். தற்போது தெலுங்கு திரையுலகில் முதல் படத்திலேயே தேசிய விருதை வென்ற இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில்  தனது முதல் நேரடி தெலுங்கு படத்தில் …

தனுஷ் நடிப்பில் மூன்று மொழிகளில் தயாராகும் புதிய படம் Read More

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில்   ரூ.18 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வீரவசந்தராயர் மண்டபம் திருப்பணிகள் மற்றும் கோயில் யானைக்குத் தேவையான மேல் சிகிக்சைகள் குறித்து இன்று (18.06.2021) மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் …

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சையை அமைச்சர் சேகர் பாபு கேட்டறிந்தார் Read More

கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான மாடத்தி திரைப்படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது.

18 ஜூன், 2021:லீனா மணிமேகலை இயக்கிய மாடத்தி திரைப்படத்தின் முன்னோட்டம்/Trailer சினிமா, இலக்கியம், கலை, அரசியல் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்தஆளுமைகளால் பிரம்மாண்டமாக வெளியிடப் படுகிறது. ஷைலஜா டீச்சர், மஞ்சு வாரியர், பிரித்விராஜ் சுகுமாரன், ஐஸ்வர்யா ராஜேஷ், அஞ்சலி மேனன், கீது மோகன் தாஸ், சேரன், ஆஷிக் அபு, பா ரஞ்சித், வசந்தபாலன், சி எஸ் அமுதன், ரீமா கல்லிங்கள், நீரஜ் கய்வான், தமிழச்சி தங்கபாண்டியன், என். எஸ். மாதவன், ரோஹிணி, எஸ்.ஆர். பிரபு, டி.எம். கிருஷ்ணா, ஷோபா சக்தி உட்பட பல கலைஞர்களும், அரசியல் தலைவர்களும்செயல்பாட்டாளர்களும் படை திரண்டு மாடத்தியின் முன்னோட்டத்தை தத்தமது சமூகவலைத் தளங்களில் வெளியிட்டனர். லீனா மணிமேகலை எழுதி, இயக்கி, தன் நிறுவனமானகருவாச்சி ஃபிலிம்ஸின் தயாரிப்பில் உருவாக்கியிருக்கும் மாடத்தி ஜீன் 24 முதல் நீஸ்ட்ரீம்ஓடிடி தளத்தில் திரையிடப்பட உள்ளது “ஏதிலிகளுக்குத் தெய்வமில்லை. அவரே தெய்வம்” என்ற மேற்கோளுடன் வரும் இப்படம்தமிழ்நாட்டின் தென்கோடியில், ‘காணத்தகாதோர்‘ என்று அடையாளப்படுத்தப்படும் புதிரைவண்ணார் சமூகத்தைச் சார்ந்த ஒரு பதின்வயது பெண்ணின் பருவ வாழ்க்கையைப்பேசுகிறது. தலித் மக்கள் மற்றும் இறந்தவர்களின் துணிகளையும் மாதவிடாய்துணிகளையும் துவைப்பவர்களான இம்மக்கள் எதிர்கொள்ளும் கொடூரமானஅடக்குமுறைகளை இப்படம் தோலுரிக்கிறது. இவர்களைப் பார்த்தாலே தீட்டு என்றுகருதப்படுவதால் மற்ற சமூகத்தினர் கண்ணில் படாமல் ஒளிந்து செல்லும் அவலநிலைக்குள்ளாகிய  இம்மக்களின் துயர வாழ்வின் பின்னணியில் பாலின, சாதிஅடையாளங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் வன்முறை ஆகியவற்றை ஆழ்ந்துஅவதானிக்கும் ஒரு உக்கிர தேவதையின் கதை மாடத்தி. இன்று வெளியாகியிருக்கும்முன்னோட்டம்  அடிமைப்பட்டிருக்கும் சமூகத்தில் பிறந்த பெண் எப்படிதனக்கிழைக்கப்பட்ட அநீதியால் உக்கிர தெய்வமாகிறாள் என்ற கதையின் மிகத்துல்லியமான காட்சி குறுக்குவெட்டாய் அமைந்திருக்கிறது. சாதி அடுக்குகளின் கடைசிமனுசியாய் வாழும் ஒரு பெண் சாதியையும் பாலின அடக்குமுறைகளையும் எதிர்கொள்வதை ஒரு பெண்ணின் பார்வை கொண்டு மாடத்தி திரைப்படம் காட்சிப் படுத்தியிருப்பதைமுன்னோட்டம் கட்டியம் கூறுகிறது. லீனா மணிமேகலை சமூக நீதி குறித்த கருத்துக்களை கவித்துவமான அழகியலுடன்பேசும் கலைப்படைப்புகளுக்காக பெயர் பெற்றவர்.  பலதரப்பட்ட பாணிகளிலான இவரின்படைப்புகள்  உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் பல விருதுகளைப்பெற்றிருக்கின்றன. லீனா மணிமேகலையின் சிறந்த  படைப்புகளான  Goddesses (2009), செங்கடல் (Cinema Verite 2011), My Mirror is the Door (2012, Cine Poem), White Van Stories (2015, Feature Documentary) மற்றும் Is it too much to ask (2017, Mockumentary) ஆகியவை இவரை ஒரு தனித்துவமிக்க தனித்திரை ஆளுமையாக நிலைநாட்டி உள்ளன.   …

கருவாச்சி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான மாடத்தி திரைப்படம் ஜூன் 24 அன்று வெளியாகிறது. Read More

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், களப்பணியாற்றி வரும் காவல் துறையினர் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாது கடமையாற்றி வருகின்றனர். அவர்களது தன்னலமற்ற பணியினை அங்கீகரிக்கும் விதமாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றி வரும் இரண்டாம் நிலைக் காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான  1 இலட்சத்து 17 ஆயிரத்து 184 காவல் துறையினருக்கு,ரூபாய் …

கொரோனா காலத்தில் களப்பணியாற்றிவரும் காவலர்களுக்கு ரூ.58 கோடி ஊக்கத் தொகை அறிவித்தார் மு.க.ஸ்டாலின் Read More

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ்

செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் சொகுசு பங்களா, கல்வி நிலையங்கள், கோயில், மசூதி என அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய வகையில் ஆசிரமம் நடத்திவருபவர் 72 வயதாகும் சிவசங்கர் பாபா. இவரின் இயற்பெயர் சிவசங்கரன். கையை உயர்த்தியபடி டான்ஸ் ஆடுவதே சிவசங்கர் பாபாவின் ஸ்டைல். …

பக்தர்கள் வேடத்தில் சென்று சிவசங்கர் பாபாவை கைது செய்த சென்னை போலீஸ் Read More

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை

தமிழ்நாடு முழுமையும் சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேடை மெல்லிசைக் கலைஞர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன், குடும்ப உறுப்பினர்களும் சேர்ந்து நிகழ்ச்சிகளில் பங்கு கொள்கின்றார்கள்.  இசைத் தொழிலை நம்பியே வாழ்கின்றார்கள். கோவில் திருவிழாக்கள், திருமணம் மற்றும் மங்கல நிகழ்வுகள், அரசு விழாக்கள் அமைச்சர் …

மேடை மெல்லிசைக் கலைஞர்கள் நல வாரியம் அமைத்திடுக வைகோ கோரிக்கை Read More

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் நடந்து  முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது, புதிய அமைச்சரவை என்னுடைய தலைமையில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகு, முதன்முதலில் டெல்லி தலைநகருக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மாலை நேரத்தில் இங்கு …

பிரதமர் மோடியை சந்தித்தது மன நிறைவான சந்திப்பாக இருந்தது – முதல்வர் மு.க.ஸ்டாலின் Read More

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல்

நாள்பட்ட இடுப்பு வலி, யோகா மூலம் குறைவது, எய்ம்ஸ்டாக்டர்கள் நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. யோகா அடிப்படையிலான ஆய்வுகள் பெரும்பாலும், நோயாளியின் அனுபவம்,  வலி மற்றும் இயலாமை மதிப்பீடு, குணமடைதல் ஆகியவற்றை சார்ந்தே இதுவரை உள்ளன. வலி, வலி சகிப்புத்தன்மை மற்றும் உடலின்நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை அளவிடும்ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளின் நாள்பட்ட இடுப்புவலியை போக்குவதில் யோகா சிறந்த வலி நிவாரணியாகவும், வலியின் சகிப்புத்தன்மை, மற்றும் உடல்நெகிழ்வுதன்மையை  அதிகரிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.  நாள்பட்ட இடுப்பு வலியில்,  யோகாவின் தாக்கத்தைமதிப்பிட புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் உடலியல்துறை கூடுதல் பேராசிரியர்கள் டாக்டர் ரேணு பாட்டியா, டாக்டர் ராஜ் குமார் யாதவ், மருந்து மற்றும் மறுவாழ்வுத்துறைஉதவி பேராசிரியர் டாக்டர் ஸ்ரீ குமார் ஆகியோர் ஆய்வுமேற்கொண்டனர்.  3 ஆண்டுகளாக இடுப்பு வலியால் அவதிப்படும் 50 வயதுநோயாளிகள் 100 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 4 வாரங்கள் மேற்கொண்ட முறையான யோகாபயிற்சிக்குப்பின்,  அவர்களிடம் உணர்வு அளவீட்டுபரிசோதனை (QST) மேற்கொள்ளப்பட்டது. இதில்குளிர்காலத்தில் ரத்தம் ஓட்டம் குறைவால் ஏற்படும் இடுப்புவலி குறைந்துள்ளது. வலியை தாங்கும் சகிப்பு த் தன்மை அதிகரித்துள்ளது. நோயாளிகளிடம்  பெருமூளையின்செயல்பாடுகள் உற்சாகம் அடைந்து, நெகிழ்வுதன்மைகுறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது.  நாள்பட்ட இடுப்பு வலியுள்ள நோயாளிகள், 4 வாரங்கள்யோகா பயிற்சி மேற்கொண்டபின், வழக்கமானசிகிச்சையை விட வலி குறைந்துள்ளது, முதுகுத்தண்டின்நெகிழ்வு அதிகரித்துள்ளது. வீட்டில் நீண்ட காலம் யோகா செய்தால், செலவில்லாமல் அதிக பலன்களை பெற முடியும் என இந்த ஆய்வு கூறுகிறது. இது வலியை மட்டும் போக்காமல், ஒட்டுமொத்த வாழ்க்கைதரத்தை மேம்படுத்தி, சுகாதார பலன்களை அளிக்கிறது.

நாள்பட்ட இடுப்பு வலி யோகா மூலம் குறைகிறது – ஆய்வில் தகவல் Read More

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர்

சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள  நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு  உதவ  ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற ஒருங்கிணைந்த உதவி மையம் பெருநகர காவல் கட்டுப்பாட்டறையில் 24×7 இயங்கி வருகிறது.இதன் மூலம் சென்னை பெருநகரில் உறவுகள் அற்ற நிலையில் இருப்பிடம் …

சென்னையில் காயங்களுடன் மன நோயாளியாக சுற்றிய அசாம் இளைஞரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார் காவல்த்துறை ஆணையர் Read More