டெடி இரண்டாம் பாகம் விரைவி வெளிவருமென்கிறார் ஆர்யா

ஆர்யா, அவரது மனைவி சாயிஷா நடித்த படம் டெடி. சக்தி சவுந்தர்ராஜன் இயக்கி இருந்தார், இமான் இசை அமைத்திருந்தார், யுவா ஒளிப்பதிவு செய்திருந்தார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். ஒரு கரடி பொம்மைக்குள் புகுந்து கொண்ட ஒரு பெண்ணின் உயிர் …

டெடி இரண்டாம் பாகம் விரைவி வெளிவருமென்கிறார் ஆர்யா Read More

*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————–

பாலஸ்தீனை ஆக்கிரமித்துள்ள யூத தேசத்தின் 13 வது பிரதமராக நாஃப்தலி பென்னட் 13.06.2021 இல் பதவியேற்றுள்ளார். 120 ஆசனங்களைக்கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் 60 உறுப்பினர்கள் நாப்தலி பென்னட்டுக்கு ஆதரவாகவும், 59 உறுப்பினர்கள் அவரை எதிர்த்தும் வாக்களித்ததுடன், ஒரு முஸ்லிம் உறுப்பினர் வாக்களிப்பில் …

*“ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க விடமாட்டோம்” என்று கூறுகிறார் இஸ்ரேலின் புதிய பிரதமர். ————– Read More

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது

சமூகவலைதளங்களில் திராவிட அரசியலையும் அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்பவர் கிஷோர் கே ஸ்வாமி. இவருக்கு பலத்த எதிர்ப்புகளும் ஆதரவுகளும் உள்ளன. இந்நிலையில் சமீபத்தில் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி குறித்தும் அவதூறு கருத்து வெளியிட்டுள்ளார். மேலும் இவர் பெண் பத்திரிக்கையாளர் …

திராவிட அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்த கிஷோர் கே ஸ்வாமி கைது Read More

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு

இஸ்ரேல் நாட்டில் திடீர் திருப்பமாக 8 கட்சிகள் அடங்கிய கூட்டணி வெற்றிபெற்று புதிய பிரதமர் பதவியேற்றார். 12 ஆண்டுகளாக பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு அதிகாரத்தில் இருந்து இறக்கப்பட்டுள்ளார். 120 இடங்களை கொண்ட அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 8 எதிர்க்கட்சிகள் அடங்கிய …

இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்தலி பென்னட் பதவியேற்பு Read More

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி.

சென்னை ஜூன். 14.:- மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக, சென்னை மேற்கு மாவட்டம் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 118வது வட்டம், புதுப்பேட்டை கார்டன் தெருவில் தூய்மை பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு …

ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்; தயாநிதி மாறன் எம்.பி. Read More

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி: பிரசாந்த் கிஷோர் திட்டம்

ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டவர் குறிப்பாக குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடி அமர்வதற்கு ஆதரவாக இருந்தவர் பிரசாந்த் கிஷோர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பாஜகவுக்கும் அவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அடுத்து பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்கு அவர் …

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணி: பிரசாந்த் கிஷோர் திட்டம் Read More

அம்பேத்கரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என பாஜக அவதூறு பரப்பியிருக்குமென கூறுகிறார் மெஹபூபா முஃப்தி

ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து குறித்த காங்கிரஸ் தலைவா் திக்விஜய் சிங்கின் கருத்து சா்ச்சையை உருவாக்கியிருக்கும் நிலையில், சட்ட மேதை அம்பேத்கா் உயிருடன் இருந்திருந்தால் அவரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என்று பாஜக அவதூறு பரப்பியிருக்கும் என்று மக்கள் ஜனநாயக கட்சித் தலைவா் மெஹபூபா …

அம்பேத்கரையும் பாகிஸ்தான் ஆதரவாளா் என பாஜக அவதூறு பரப்பியிருக்குமென கூறுகிறார் மெஹபூபா முஃப்தி Read More

பெற்ற பிள்ளைகளே தந்தையிடம் 20 சவரன் நகை ரூ 16 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி அருகே, 16 லட்சம் ரூபாய், 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தாசரப்பள்ளியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், (வயது60) விவசாயி. இவருக்கு லோகேஷ்குமார், (32 )என்ற  மகனும், இரு மகள்களும் உள்ளனர். லோகேஷ்குமார், தந்தையுடன் கோபித்து …

பெற்ற பிள்ளைகளே தந்தையிடம் 20 சவரன் நகை ரூ 16 லட்சம் மோசடி Read More

வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி

பெரம்பூர் அரசு அதிகாரியிடம், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, 1 லட்சம் ரூபாய் ஆட்டை போட்ட மர்மநபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பூர், ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன், 55. இவர், தலைமை செயலகத்தில் இணை செயலராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் …

வங்கியில் இருந்து பேசுவதாக அரசு அதிகாரியிடம் ரூ.1 லட்சம் மோசடி Read More

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழக அரசுமேற்கொண்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில்உள்ளது. நாளை (14.6.2021) முதல் தமிழகத்தில் சென்னை உட்பட27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கஉத்தரவிடப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவின்பேரில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், கொரோனாதொற்று ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், காவல் ஆணையாளர்மற்றும் டாஸ்மாக் நிறுவன மேலாண்மை இயக்குநர்திரு.எல்.சுப்ரமணியன், இ.ஆ.ப., தலைமையில், காவல் அதிகாரிகள்மற்றும் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகளுடன் இன்று (13.4.2021) மாலை காவல் ஆணையரகத்தில் ஒருங்கிணைப்பு கலந்தாய்புமேற்கொள்ளப்பட்டு, உரிய கட்டமைப்புகளுடன் கடைகள் திறந்துநடத்திட ஆலோசிக்கப்பட்டது. இக்கலந்தாய்வில் டாஸ்மாக் கடைகளில் காவல்துறையினர்மூலம் தகுந்த தடுப்புகள் கொண்டு, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யவும், பொதுமக்களை வரிசைபடுத்தவும், சமூக இடைவெளிகடைபிடிக்கவும், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளிகடைபிடிக்காமல் வரும் நபர்களுக்கு, மதுபான வகைகள் வழங்கவேண்டாம் எனவும், ஒலி பெருக்கி வசதி, சில மீட்டர் தூரத்தில்பந்தல் அமைத்து மதுபானங்கள் வாங்க வருபவர்களைவரிசைபடுத்துதல் குறித்தும், நடவடிக்கை எடுக்கஆலோசிக்கப்பட்டது.  மேலும், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப., அவர்கள், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர்மற்றும் காவல் அதிகாரிகளுடன் இன்று (13.6.2021) மாலைசென்னை, 1.பெரியமேடு, ஈ.வெ.ரா.சாலை (எவரெஸ்டு ஓட்டல்எதிரில்), 2.எழும்பூர், வான்னல்ஸ் சாலை, (ஆல்பட் திரையரங்கம்அருகில்), 3. ஐஸ் அவுஸ், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில்அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நேரில் சென்றுகட்டமைப்புகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்து, அங்குமேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டார். மேலும், அங்குள்ள டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள்மற்றும் விற்பனையாளர்களுக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் படி விற்பனை செய்ய வேண்டும் எனஅறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, டாஸ்மாக் பொது மேலாளர்திரு.சுகுமாறன், கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) என்.கண்ணன், இ.கா.ப., கிழக்கு மண்டல இணைஆணையாளர் எஸ்.ரஜேந்திரன், இ.கா.ப., துணைஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஜூன் 14 மதுக் கடைகள் திறக்கப் படுவதை எதிர்த்து போராட்டங்கள் அறிவித்திருப்பதால் ஆணையர் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார் Read More