செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பரனூர்சுங்கச்சாவடியில் இருந்து டாரஸ் டிப்பர் லோரி எந்த போக்குவரத்து விதிகளையும் பின்பற்றாமல் பலமுறை எச்சரித்தும் நிறுத்தமால் செல்வதாக அவர்களுக்குத் தகவல் கிடைத்தது. காவலர்கள. அந்த லோரியை நிறுத்த முயன்றபோது, அது நிற்காதாதால் அந்த சமயத்தில், மறைமலைநகர் போக்குவரத்து ஆய்வாளர் .முருகன், லோரியை தடுப்புகள் வைத்து நிறுத்த முயன்றதால், லோரி வேகம் குறைத்தது. உடனடியாக அவர் லோரியின் படியில் ஏறியுள்ளார், ஆனால் லோரி நிற்காமல் வேகமாக ஓடியதால், அவர் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் படியில் பயணித்துள்ளார். லோரி ஜூனியர் குப்பண்ணா சந்திப்பை நெருங்கும் போது, அது ஒரு தடுப்பில் மோதி நின்றுள்ளது. பொதுமக்களின் உதவியுடன் லோரியை ஓட்டிய நபரை பிடிக்க ஆய்வாளர் முயன்றபோது, லோரியில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ஆய்வாளர் மற்றும் பொதுமக்களை அந்த ஓட்டுநர் மிரட்டியுள்ளார். இருப்பினும், அவரை பிடித்து மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளனர். விசாரணையில், பரனூர் சுங்கச்சாவடியில் லோரியை அதன் ஓட்டுநர் நிறுத்திவிட்டு கீழே இறங்கி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத ஒருவர் லோரியில் ஏறி வேகமாகச் எடுத்து சென்றது தெரிய வந்தது (பின்னர் அவர் திருநெல்வேலியைச் சேர்ந்த சுபாஷ் (35) என அடையாளம் காணப்பட்டது). மேற்கண்ட சுபாஷ் மனநிலை சரியில்லாதவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுபாஷை நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர். முருகன், ஆய்வாளர் லோகேஷ் காந்தி, மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் விரைவாகச் செயல்பட்டு அதிவேகமாகச் சென்ற லோரியை நிறுத்தியுள்ளனர். இந்த காவல் அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், சாலையில் பல விலைமதிப்பற்ற உயிர்கள்காப்பாற்றப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், படைத்தலைவர் சங்கர் ஜிவால், இ.கா.ப, ,மேற்கண்ட காவலர்களின் விரைவான மற்றும் அர்ப்பணிப்புமிக்க செயலைப் பாராட்டி சென்னை காவல்துறைதலைமை அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற லோரியை தடுத்து நிறுத்திய காவலர்களை பாராட்டிய காவல்த்துறை தலைவர் சங்கர் ஜியால்
