ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் செப்டம்பர் 28,ல் வெளியீடு

நடிகர் ஹரிஷ் கல்யாண் வர்த்தக வட்டாரத்தில் கதாநாயகனாக மாறியுள்ளார். அவருடையபார்க்கிங்படம் குறித்தான அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புகள்  அதிகரித்துள்ளன. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவ. படம் செப்டம்பர் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை அறிவித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடித்துள்ளார். எம்.எஸ்.பாஸ்கர், ராமராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல்மற்றும் சரியான செயலாக்கம் என குறுகிய காலத்தில் முழு படப்பிடிப்பையும் படக்குழு முடித்துள்ளது.******

படத்தின் ப்ரீரிலீஸ் பிசினஸ் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘பலூன்படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தைஇயக்கி உள்ளார்.

பார்க்கிங்படத்தில் சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலி கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்புகள்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ளபார்க்கிங்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார்மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர்தயாரித்துள்ளனர்.