டாக்டர்.டி.அருளானந்த், மேத்திவ் அருளானந்த் தயாரிப்பில், யுவராஜ் சின்னச்சாமி இயக்கத்தில் ஏகன், ஶ்ரீதேவி அப்பாலா, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “ஹைக்கூ”. ஏகன் தான் படிக்கும் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வேரொரு கல்லூரியில் சேர்கிறார். அந்த கல்லூரியில் படித்துவரும் ஶ்ரீதேவி அப்பாலாவுக்கும் ஏகனுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் காதலியின் அப்பா சாதிவெறி பிடித்தவராக இருப்பதால் வேரொருவனுக்கு ஶ்ரீதேவி அப்பாலாவை திருமணம் செய்து வைக்கிறார். இதனால் விரக்தியடைந்த ஏகன் ஒரு தொழில்நுட்ப அலுவலகத்தில் குழுத்தலைவராக வேலை பார்க்கிறார். அந்த குழுமத்தில் பெமினா ஜார்ஜிக்கு வேலை கிடைக்கிறது. அந்த அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஒருவரை பெமினா காதலிக்கிறாள். பிறகு அவர்களுக்குள் காதல் முறிவு ஏற்படுகிறது. இறுதியில் ஏகனும் பெமினாவும் காதலிக்கிறார்கள். ஏகன் தனது பழைய காதலி ஶ்ரீதேவி அப்பாலாவின் நினைவாகவே தன்னுடன் பழகுகிறான் என்பது பெமினா ஜார்ஜ்ஜுவுக்கு தெரிய வருகிறது. ஏகன் தனது பழைய காதலி ஶ்ரீதேவியின் நகலாகத்தான் தன்னை பார்க்கிறான் என்பதை புரிந்துகொண்ட பெமினா ஜார்ஜின் ஏகனுடனான காதலை முறித்த்குக் கொள்கிறாள். அதன் பிறகு முடிவு என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை. ஏகனின் நடிப்பு மெச்சத்தகுந்தது. தனது கதாபாத்திர்த்தை நன்கு உள்வாங்கி சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் வரும் இரண்டு கதாநாயகிகள் கதாபாத்திரமும் சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது. கதாநாயகிகள் இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நன்றாக நடித்து அசத்துகிறார்கள். சித்துகுமாரின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரிய பலம். பிரயேஷ் குமாரின் ஒளிப்பதிவு, காட்சியின் உணர்வு உருவாக்கத்துக்குத் துணை நிற்கிறது. அதிர்ச்சி அருண், சுப்ரமணிய சேது, அதியமான், மைம் கோபி ஆகிய அனைவரும் திரைக்கதையின் ஓட்டத்துக்கு துணை நிற்கிறார்கள். ஹைக்கூ என்பது ஆழ்ந்த சிந்தனையை தரகூடிய ஓரிரு வசனக் கவிதைதான். அதை ஒரு காவியக் கவிதையாக திரையில் படைத்திருக்கிறார் இயக்குநர் யுவராஜ் சின்னச்சாமி.
“ஹைக்கூ” திரைப்பட விமர்சனம்
