இளையராஜா இசையில் உருவாகியுள்ள படம் “ஸ்ரீ ராமானுஜர்”

ஹைகிரிவா சினி ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில்  டி. கிருஷ்ணன் திரைக்கதை அமைத்து ராமானுஜராக நடித்து  தயாரித்துள்ள படம்ஸ்ரீ ராமானுஜர்  ராதாரவி, கோட்டா சீனிவாச ராவ்,  ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, ஸ்ரீமன், அனு கிருஷ்ணா, காயத்ரி, சோனியா சிங் வாலா ஆகியோர் நடித்துள்ளனர்ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து உருவாகியுள்ள இந்த படத்திற்கு  இளையராஜாஇசையமைத்துளார்.********

பாடல்கள்  – வாலி  ஒளிப்பதிவுமாதவராஜ் வசனம்  – ரங்கமணி எடிட்டிங்சுரேஷ் அர்ஷ் கலை இயக்கம்மஹேந்திரன் நடனம்சிவசங்கர், அஜெய் மக்கள் தொடர்பு  – மணவை புவன்  இணை இயக்கம்வனோத் கண்ணா இயக்கம்ரவி V. சந்தர் திரைக்கதை எழுதி,தயாரித்துளார் T. கிருஷ்ணன்.

படம் பற்றி ராமானுஜராக வாழ்ந்த T. கிருஷ்ணன் கூறியதாவது…. இது முழுக்க முழுக்க ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய படம்மகான் ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை எங்கள் நிறுவனத்தின் மூலம் திரைப்படமாக எடுத்ததை பெருமையாக நினைக்கிறோம்ராமானுஜர் இந்து மதத்தில் புரட்சி செய்த மகான் மட்டுமல்ல இந்து தர்மத்தின் லெஜண்ட் ஆவார்சாதி வேறுபாடு அற்ற சமுதாயம் வேண்டும் என்றும், எல்லா மதத்தினருக்கும் நற்கதி  என்ற உணர்வையும் மக்களிடையே உருவாக்கியவர்இந்த மாபெரும் மகானின் வாழ்க்கை வரலாற்றை இளையராஜாவின்  இசையோடு இணைத்து காவியமாக உருவாக்கியுள்ளோம்மேலும் கவிஞர் வாலியின் பாடல் வரிகள் சிறப்பாக இருக்கும். பாடல்கள் அனைத்தும் மனதில் நிற்கும்வரலாற்று படம் என்பதால் மிகுந்த சிரமப்பட்டு இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்.   படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என்றார் T. கிருஷ்ணன்.