சிசிசி பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில், சைதன்யா சங்கரன், மரகத சுபா சங்கரன், டாக்டர்.அர்ச்சனா சங்கரன், ஆர்திகா சஙகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘இது நம்ம குடும்பம்’. இப்படத்தின் கதை, திரைகக்தை, வசனம் எழுதி சைதன்யா சங்கரன் இயக்கியிருக்கிறார். இதில் ஆனந்த் பாபு கதையின் நாயகனாக நடிக்க, நாயகியாக சாஜிதா நடித்திருக்கிறார். இவர்களுடன் மகாநதி சங்கர், தீபக் நம்பியார், சோனியா தாஸ், அன்ரிஷா, தேனி அமுதா, ஐஸ்வர்யா, முத்துக்காளை, கிரேன் மனோகர், சுப்புராஜ், சூர்யா, பாரதி சங்கர், கார்த்திக், அப்துல்லா ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் டாக்டர்.தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், “நான் ஒரு நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என்று அழைக்கப்பட்டவுடன், தேதி எல்லாம் பதினைந்து நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டு விடுகிறது. ஆனால், சைதன்யா சங்கரன் அவர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும் என்று சொன்னார், இது நம்ம குடும்பம் என்பதால் வந்தேன். இது மகிழ்ச்சியான தருணம். இந்த பக்கம் ஆர்.வி.உதயகுமார், அந்த பக்கம் பேரரசு, இவர்கள் இருவரும் சிறந்த இயக்குநர்கள். ஒரு பக்கம் உதயமாகி, மறுபக்கம் பேரரசாக ஆக வேண்டும் என்பது தான், தாமரையின் ஆசை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நடுவுல தான் நான் இருக்கேன், வர ஸ்டேட்டுக்கு வர வேண்டும் என்று தான் ஆசை, அதனால் தான் இங்கே வந்தேன். நான் சாலிகிராமத்தில் இருப்பது தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு, அதிகமான திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அரசியல் குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் படிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினேன், அதனால் சினிமா மீது எனக்கு பெரிய ஆர்வம் இல்லை. அப்போது படித்தவர்கள் தான் அரசியல்வாதிகளாக இருந்தார்கள், இன்று நடிப்பவர்கள் அரசியல்வாதியாக மாறி வருகிறார்கள்.*

