ஜே.எஸ்.கே. தயாரித்து இயக்கி கதாநாயகனாகவும் நடித்திருக்கும் “ஃபயர்” படத்தில், பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரஷிதா மகாலட்சுமி, காயத்ரி ஜான், சிங்கம்புலி, எஸ்.கே.ஜீவா, சுரேஷ் சக்கரவர்த்தி, அனு விக்னேஷ், மனோஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். உடம்பு பிடி மருத்துவமனை நடத்திவரும் பாலாஜி முருகதாஸை காணவில்லை என்று அவரது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கிறார்கள். புகாரைப் பெற்றுக் கொண்ட ஆய்வாளர் ஜே.எஸ்.கே. துரிதமான விசாரணையை மேற்க்கொள்கிறார். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, “நான்தான் பாலாஜி முருகதாஸை கொலை செய்தேன்” என்று ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைகிறார். அதே நேரத்தில் “என் மகன் பாலாஜி முருகதாஸ் உயிரோடுத்தான் இருக்கிறான்” என்று அவனது பெற்றோர்களும் ஆய்வாளர் ஜே.எஸ்.கேவிடம் வாக்குமூலம் தருகிறார்கள். இதில் எது உண்மை? கொலை செய்யப்பட்டிருந்தால் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பதுதான் கதை. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை துப்பறியும் நாவலைப்போல் படத்தை விறுவிறுப்பாக நகர்த்தி செல்கிறார் இயக்குநர் ஜே.எஸ்.கே. துப்பறியும் ஆய்வாளராகவே மாறியும் நடித்திருப்பது கைத்த்கட்ட வைக்கிறது. அடுத்தடுத்து வரும் காட்ச்களை ஆவலுடன் எதிபார்க்க வைத்துள்ளார். சபாஷ் ஜே.எஸ்.கே. புதுமையான வில்லத்தனத்துடன் மிளிர்கிறார் பாலாஜி முருகதாஸ். கதாபாத்திரத்தை நன்றாக உள்வாக்கி படுக்கையறை காட்சிகளில் நடித்துள்ளார். சாந்தினி தமிழரசன், சாக்ஷி அகர்வால், ரஷிதா மகாலட்சிமி, காயத்ர் ஜான் ஆகியோரின் கதாபாத்திரத்திற்கேற்ற உடற்கட்டும், காமத்தீயில் துடிக்க துடிக்க வெந்து தணிந்த மேனியழகும் படத்தின் ஓட்டத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. கதைக்கேற்ற பின்னணி இசையும் ஒளிப்பதிவும் பாராட்டும்படி உள்ளது. உச்சக்கட்ட காட்சியில் யாரும் யூகிக்க முடியாத எதிர்பார்க்காத திருப்பத்தை தந்து கதையை முடித்திருக்கிறார் இயக்குநர் ஜே.எஸ்.கே. குடும்ப பெண்களுக்கு விழிப்புணர்வு பாடத்தை திரையில் நடத்திருக்கும்படம் “ஃபயர்” மதிப்பீடு 5க்கு 3.
“ஃபயர்” திரைப்பட விமர்சனம்
