கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் நலன் குமரசாமி இயக்கத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், ஆனந்தராஜ், ஜி.எம்.சுந்தர், கருணாகரன், நிழல்கள் ரவி, பி.எல்.தேனப்பன், ஷில்பா மஞ்சுநாத், ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “வா வாத்தியார்”. ராஜ்கிரண் எம்.ஜி.ஆரின் அதிதீவிர ரசிகர் 1987 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று ராஜ்கிரண் ஒரு திரையரங்கில் எம்.ஜி.ஆர் நடித்த ஒரு படத்தை தன் நண்பர்களுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆர் இறந்துவிட்டதாக ராஜ்கிரணுக்கு தகவல் வாருகிறது. எம்.ஜி.ஆர் இறந்த அதே நேரத்தில் ராஜ்கிரணுக்கு ஒரு பேரன் பிறந்திருப்பதாகவும் தகவல் வருகிறது. எம்.ஜி.ஆரின் உள்ளங்காலில் ஒரு மச்சம் இருப்பதுபோல் அன்று பிறந்த தனது பேரணுக்கும் உள்ளங்காலில் மச்சம் இருக்கிறது. அதனால் எம்.ஜி.ஆர்தான் தனக்கு பேரனாக பிறந்திருக்கிறார் என்று நினைத்து குழந்தைக்கு “ராமு” என்று பெயர் வைக்கிறார். இளம்வயதிலேயே எம்.ஜி.ஆரின் நல்ல குணங்களை எல்லாம் போதித்து சிலம்பாட்டம், உடற்பயிற்சி எல்லாம் பேரனுக்கு கற்றுக் கொடுக்கிறார். ராமுவாக கார்த்தி பெரியவனாக வளர்ந்து காவல்த்துறை ஆய்வாளராக பணியாற்றுகிறார். ஆனால் அவர் எம்.ஜி.ஆரின் குணாதிசயங்கள் இல்லாமல், நம்பியாரின் குணாதிசயங்கள் கொண்ட பணத்திற்காக ஊழல்வாதி அதிகாரியாகவும் வில்லன் சத்தியராஜின் ஏவலாளியாகவும் வாழ்க்கை நடத்துகிறார். இதைக் கேள்விப்பட்ட ராஜ்கிரண் மனவேதனையடைந்து இறந்துபோகிறார். தாத்தா ராஜ்கிரணின் இறப்புக்குப் பிறகு கார்த்தி என்ன ஆனார்? என்பதுதான் கதை. கார்த்தி, எம்.ஜி.ஆரின் நிதர்சனமான வாழ்வையும் திரையுலக சிந்தனை வாழ்வையும் பிரதிபலிக்கும் விதமாக அற்புதமாக நடித்துள்ளார். எம்.ஜி.ஆராக வெள்ளைக் குதிரையில் வரும் காட்சியிலும், எம்.ஜி.ஆரின் பாடல் பழைய பாடல் காட்சியிலும் கார்த்தியின் நடிப்பால் திரையரங்லிருக்கும் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் உற்சாகமடைகிறார்கள். ராஜ்கிரண் இறந்து கிடக்கும்போது துக்கம் விசாரிக்க வரும் ஆனந்தராஜ், எங்கவீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆரின் சாயலில் கார்த்தியிடம் துக்கம் விசாரிக்கும் காட்சியில் சிரிக்க மறந்தவன்கூட சிரித்து விடுவான். அவ்வளவு அற்புதமாக நடித்து துக்கவீட்டை குதூகலமான வீடாக மாற்றிவிடுகிறார். எம்.ஜி.காலத்து நகைச்சுவயாளாராக ஆனந்தராஜ் நடித்து கைத்தட்டலை பெருகிறார். எம்.ஜி.ஆரின் ரசிகராக வரும் ராஜ்கிரணின் நடிப்பு தூக்கலாக உள்ளது. ஜி.எம்.சுந்தர், கருணாகரன், நிழல்கள் ரவி, பி.எல்.தேனப்பன், ஷில்பா மஞ்சுநாத், ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வஞ்சகமில்லாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். சத்யராஜின் நடிப்புக்கேற்ற வில்லன் கதாபாத்திரம் அமையவில்லை. வழுவிழந்திருக்கிறது. கவர்சிக்கு மட்டுமே கிருத்தி ஷெட்டியை பயன்படுத்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் மறு அவதாரமாக கார்த்தியை முன்னிறுத்தியிருக்கிறார் இயக்குநர் நலன் குமரசாமி. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சலிப்புத்தட்டாமல் திரைக்கதை அமைந்திருக்கிறது. வணிகரீதியான பொழுதுபோக்கு படத்தை தந்திருக்கும் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ரஜாவும் இயக்குநர் நலன் குமரசாமியும் பாராட்டுதலுக்குறியவர்கள்.
“வா வாத்தியார்” திரைப்படம் விமர்சனம்
