ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படம் “ஹாட் ஸ்பாட்”

கே ஜே பி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் சார்பில் கே ஜே பாலமணி மார்பன் மற்றும் சுரேஷ்குமார் இணைந்து தயாரிக்க, இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில்,  ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் ஹாட் ஸ்பாட். வரும் மார்ச்  29ல் திரைக்குவரவுள்ளது. இப்படத்தில் கலையரசன்ஆதித்யா பாஸ்கர்,  மற்றும்  கௌரி கிஷன்,  சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர்,  சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.*******

இப்படத்தின் அறிமுக நிகழ்வில் தயாரிப்பாளர் கே ஜே பாலமணி மார்பன் பேசியதாவதுஹாட் ஸ்பாட் எங்களுடைய முதல் தயாரிப்பு. விக்னேஷ் நாலு வருடமாக பழக்கம். லாக்டவுன் டைமில் ஒருஷார்ட் ஃபிலிம் செய்தோம். திட்டம் இரண்டு படம் செய்த போதே இப்படத்தின் கதை சொன்னார். எனக்குப்பிடித்திருந்தது.  டிரெய்லர் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியுள்ளது. படம் பற்றி நிறையக் கருத்துக்கள்வருகிறது. படம் பாருங்கள் பிடிக்கும். அதன் பிறகு கருத்துச் சொல்லுங்கள். இப்படம் முடித்து விட்ட பிறகுசிக்ஸர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெரிய ஆதரவாக வந்தார்கள் அவர்களுக்கு என் நன்றிகள். மார்ச் 29 திரையரங்குகளில் வெளியாகிறது. படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் கலையரசன் பேசியதாவதுஇந்தப்படத்தின் டிரெய்லர் வெளியானபோதே திரையுலகிலிருந்து,  பலர் போன் செய்து திட்டினார்கள். ஆனால் முழுப்படமும் பார்த்தால் உங்களுக்கு இதன் அர்த்தம் புரியும். விக்னேஷ் கதை சொல்லும் விதம் மாறுபட்டுஇருக்கலாம், ஆனால் அது சென்று சேரும் இடம் சரியாக இருக்கும். என் கதை மட்டும் தான் எனக்கு தெரியும். ஆனால் விக்னேஷ் பிரதர் மீது நம்பிக்கை இருக்கிறது. யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தார். அதுவும்இந்த மாதிரி, அலைகளை ஏற்படுத்தியது ஆனால் அது முடியும் போது மிக அழகாக நம்மைச் சிந்திக்கும்படிசெய்யும். அதே போல் இந்தப்படமும் இருக்கும்,  படம் பாருங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவதுஹாட் ஸ்பாட் படத்தை என் நண்பர்கள் தான் தயாரித்துள்ளனர், என் மீதான நம்பிக்கை இப்படத்தில் கலையரசன்,   96 பட ஆதித்யா பாஸ்கர்,  மற்றும்  கௌரி கிஷன்,  சாண்டி மாஸ்டர், அம்மு அபிராமி, ஜனனி ஐயர், திட்டம் இரண்டு பட ஹீரோ சுபாஷ், சோபியா முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.மட்டும் தான் காரணம்அவர்களுக்கு நன்றி. நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர், எல்லோரும் கதையை நம்பி மட்டுமே வந்துள்ளனர். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். யுவர்ஸ் ஷேம்ஃபுலி எனத் தொடர் எடுத்தேன் அது ஏற்படுத்திய எதிர்வினைகளைத் தான் இந்தப்படமும் ஏற்படுத்தும் என நம்புகிறேன். தப்பான கருத்தைச் சொல்லிவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமுடன் வேலை பார்த்துள்ளோம். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.