“தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம் விமர்சனம்

கண்ணன் ரவி தயாரிப்பில் நித்திஷ் சகாதேவ் இயக்கத்தில் ஜீவா, தம்பி ராமைய்யா, இளவரசு, பார்த்தனா நாதன், சென்சன் திவாஹர், ஜெய்வாந்த் ஆகியோரின் நசிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தலைவர் தம்பி தலைமையில்”. மாட்டிபுதூர் என்ற ஒரு கிராமத்தில் உள்ளாட்ட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் ஜீவாவும் சென்சன் திவாஹரும் எதிரெதிரான களத்தில் போட்டியிடுகிறார்கள். ஜீவா அந்த கிராமத்தில் நடக்கும் நல்லது கெட்டதுகளில் தானாக முன்வந்து அந்த காரியத்தை நடத்திவைக்கும் பழக்கமுடையவர்ீ. இளவரசுவின் மகள் பிராத்தனாவுக்கு திருமணம் நிச்சையக்கப்பட்டு நாளை காலையில் திருமணம் நடக்கவிருக்கிறது. அதை முன்னின்றி நடத்திவைக்க வேண்டுமென்று ஜீவாவிடம் இளவரசு கூறுகிறார். அதற்காண வேலைகளை ஜீவா செய்துவருகிறார். இந்நிலையில் இளவரசின் பக்கத்து வீட்டில் தம்பி ராமைய்யா தனது குடுப்பத்துடன் வாழ்ந்துவருகிறார். இளவரசுக்கும் தம்பி ராமைய்யாவுக்கும் தீராத முன்பகை உள்ளது. காலையில் 10.30மணி சுபமுகூர்த்ததில் திருமணம் நடைபெற வேண்டும். அன்று இரவே மாப்பிள்ளை வீட்டார்கள் அந்த கிராமத்துக்கு வந்து ஒரு விடுதியில் தங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் நோய்வாய்பட்டு வயது மூப்பின் காரணமாக படுத்த படுக்கையிலிருக்கும் தம்பி ராமைய்யாவின் தந்தை மரணமடைகிறார். இளவரசின் மகள் பிராத்தனாவுக்கு காலை 10.30மணிக்கு மூகூர்த்தம். அதே நேரமான 10.30மணிக்குத்தான் தந்தையின் பிணத்தை தேரில் வைத்து சவ ஊர்வலம் நடத்துவேன் என்று தம்பி ராமைய்யா பிடிவாதமாக இருக்கிறார. தம்பி ராமைய்யாவை சமாதானப்படுத்தி முகூர்த்தம் முடிந்த பிறகு பிண ஊர்வலம் நடத்துங்கள் என்று ஜீவாவுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் சென்சன் திவாஹர் பிணத்தை அதே முகூர்த்த நேந்ரத்தில் எடுக்க தம்பி ராமைய்யாவுக்கு தூபம் போடுகிறார். இதற்கிடையில் மணப்பெண் பிராத்தனா அன்று இரவு காணாமல் போய்விடுகிறார். இளவரசுக்கும் தம்பி ராமைய்யாவுக்கும் என்ன பகை? குறிப்பிட்ட நேரத்தில் காணாமல்போன பிராத்தனாவுக்கு திருமணம் நடந்ததா இல்லையா? அதே நேரத்தில் தம்பி ராமையாவின் தந்தை பிணம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதா? என்பதை நகைச்சுவை கலாட்டாவுடன் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் நித்திஷ் சகாதேவ். இளவரசும் தம்பிராமைய்யாவும் விடாக்கண்டன் கொடாக்கண்டன் பாணியில் நடித்து அசத்தியிருக்கிறார்கள். தம்பி ராமைய்யாவின் நடிப்பை பார்த்து இள்வரசே அசந்துபோகும் அளவுக்கு சாமியாடி நடித்து திரையரங்கை அதிரவைக்கிறார். ஜீவா இளவரசுக்கும் தம்பி ராமைய்யாவுக்கும் இடையில் இருதலை கொல்லி எறும்புபோல் படும்பாடு அலாதியானாது. கோபம் சிரிப்பு. அதிர்ச்சி என பன்முகத்தனையுடன் நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார். சிரித்து சிரித்தே படத்தை கலகலப்பாக்கியிருக்கிறார் ஜீவா.. வில்லனாக வரும் சென்சன் திவாஹர் வில்லத்தனத்தை அலட்டிக் கொள்ளாமல் நடித்து கைதட்டலைப் பெறுகிறார். பார்த்தனா நாதனின் உச்சக்கட்ட நடிப்பு கைத்தட்ட வைக்கிறது. பிடிவாத குணத்துக்கு இயற்கையே தீர்ப்பளிப்பதுபோல் கதையை முடித்திருக்கும் இயக்குநர் நித்திஷ் சகாதேவ் வண ரீதியான பொழுதுபோக்கு படத்தை தந்துள்ளார்.