தனுஷின் 54வது திரைப்படம் “கர”. விக்னேஷ் ராஜா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கே. கணேஷ், திங்க் ஸ்டூடியோஸுடன் இணைந்து தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இப்படத்துன் முதல் பதாகை வெளியாகியுள்ளது. இதில் தனுஷ் மிகவும் முரட்டுத்தனமான மற்றும் தீவிரமான தோற்றத்தில் காணப்படுகிறார். தனுஷுவுக்கு ஜோடியாக மமிதா பைஜு முதல் முறையாக இணைந்துள்ளார். இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ் வெஞ்சரமூடு, கருணாஸ் மற்றும் பிருத்வி பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். *******
இது கதைக்குத் தேவையான ஆழத்தை அளிக்கும். குஷ்மிதா கணேஷ் இணைத் தயாரிப்பில் உருவாகும் இப்படம், வலுவான வர்த்தக அம்சங்களுடன் கூடிய ஒரு தீவிரமான த்ரில்லர் கதையாக இருக்கும். ‘போர் தொழில்’ படத்தை தொடர்ந்து ஆல்ஃபிரட் பிரகாஷ் மற்றும் விக்னேஷ் ராஜா ஆகியோர் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் தேனி ஈஸ்வர் (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்), மாயபாண்டி (கலை இயக்கம்), காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு) மற்றும் கபிலன் செல்லையா (பப்ளிசிட்டி டிசைன்) ஆகியோர் உள்ளனர். மக்கள் தொடர்பாளராக ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ் மற்றும் சதீஷ் (AIM) செயல்படுகின்றனர்.
*தொழில்நுட்பக் குழு* எழுத்து & இயக்கம்: விக்னேஷ் ராஜா தயாரிப்பு: ஐசரி K கணேஷ் இணை தயாரிப்பு: குஷ்மிதா கணேஷ் தயாரிப்பு நிறுவனம்: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & திங்க் ஸ்டூடியோஸ் கூடுதல் திரைக்கதை & வசனங்கள்: ஆல்ஃபிரட் பிரகாஷ், விக்னேஷ் ராஜா ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர் படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங் கலை இயக்கம்: மாயபாண்டி ஆடை வடிவமைப்பு: காவ்யா ஸ்ரீராம் பப்ளிசிட்டி டிசைன்: கபிலன் செல்லையா மியூசிக் லேபிள்: வெல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ், சதீஷ் (AIM)

