“ஐசரி கணேஷ் ஒரு உண்மையான சினிமா காதலர்” – அமைச்சர் ராஜ்மோகன் புகழாரம்

கட்டாகுஸ்த்தி 2 திரைப்படம் 50 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதன் வெற்றி விழாவில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:  “தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அண்ணன் ஒரு உண்மையான சினிமா காதலர். அவருக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருக்கும். யாராவது உதவி கேட்டால் உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனம் கொண்டவர். சினிமா மற்றும் கல்வித் துறை என இரண்டிலும் தொடர்ந்து பல சேவைகளை செய்து வருகிறார். ‘கட்டா குஸ்தி 2’ 50 நாட்களைக் கடந்து ஓடுவது இந்தக் காலகட்டத்தில் மிகப்பெரிய சாதனை. இன்றைக்கு ஐந்து நாட்கள், ஏன் ஒரு நாளில் ஐந்து காட்சிகள் வெற்றிகரமாக ஓடுவதே சவாலான சூழ்நிலையில், 50 நாட்கள் என்பது படக்குழுவுக்கு கிடைத்த பெரிய மணிமகுடம். இப்படிப்பட்ட வெற்றிக்கு விஷ்ணு விஷால் போன்ற கடின உழைப்பாளியும், படத்தின் மீது முழுமையான நம்பிக்கை கொண்ட நடிகரும் தேவை. ******

தனது நடிப்புக்கு இணையாக சக நடிகர், நடிகைகள் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளும் அவரது மனதை நான் பாராட்டுகிறேன்.

பத்மஸ்ரீ பிரபுதேவா தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கே ஒரு சகாப்தமானவர், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பத்மஸ்ரீ பிரபுதேவா மாஸ்டர் இங்கு வந்திருப்பது மகிழ்ச்சி. அவருடன் பணியாற்றியபோது பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் அமைதியாக இருப்பார். ஆனால், கேமரா முன்பு நின்றுவிட்டால் அந்தக் கதாபாத்திரமாகவே முழுமையாக மாறிவிடுவார். இடைவேளையின்போது கூட செல்போனை பயன்படுத்தாமல், புத்தகம் படிப்பது, செஸ் விளையாடுவது என தனது நேரத்தைப் பயன்படுத்துவார். அவரது தொழில்முறை அர்ப்பணிப்பும் ஒழுக்கமும் அனைவருக்கும் ஒரு பாடமாகும். வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவருக்கு வழங்கப்படும் இந்த கௌரவம், அவர்மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகும்.