“பரிமளா அண்ட் கோ” திரைப்பட விமர்சனம்

சுபாஷ்கரன் – ஜி.கே.எம்.தமிழ் குமரன் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில், ஜெயராமன், ஊர்வசி, மிஷ்கின், யோகிபாபு, சாண்டி, சந்தோஷ் சோபன், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சுனில்குமார், ஜி.கே.எம்.தமிழ்குமரன், பூர்ணிமா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் “பரிமளா அண்ட் கோ”. சென்னை பட்டிணம்பாக்கம் பகுதியில் ஜெயராமன் தனது மனைவி ஊர்வசி, இரு மகள்களான சஞ்சனா, அனந்திகா ஆகியோருடன், யோகிபாபு வீட்டின் கீழ்தளப்பகுதி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறார்.  அதே  பட்டிணப்பாக்கம் கடற்கரைப் பகுதியில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தும் ரவுடியாக இருக்கிறார் சாண்டி. சாண்டி தினமும் சஞ்சனாவுக்கும் அனந்திகாவுக்கும் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். இதை தட்டிக் கேட்க சென்ற ஜெயர்மனையும் மிரட்டுகிறார். இதனால் விரக்தியடைந்த ஜெயராமன் தனது மனைவி மகள்களுடன் “சாண்டியை என்ன செய்யலாம் என்று ஆலோசணை நடத்துகிறார்கள். முடிவில் ரவுடி சாண்டியை கொலை செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். இவர்களுக்கு உதவியாக ஊர்வசியின் தம்பியான சிங்கம்புலியும் வருகிறார். இவ்வாறு இருக்கும்போது சாண்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடக்கிறார். கொலையாளியை கண்டுபிடிக்க காவல்த்துறை ஆய்வாளர் மிஷ்கின் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்குகிறார். சாண்டி கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்த ஜெயராமன்,  இந்த கொலையை மனைவி ஊர்வசி, அல்லது மகள்கள் சஞ்சனா அல்லது அனந்திகா ஆகியவர்கள்தான் சாண்டியை கொலை செய்திருக்க வேண்டுமென்று சந்தேகப்படுகிறார். அதேபோல் கணவந்த்ஹான் கொலை செய்திருக்க வேண்டுமென்று ஊர்வசி சந்தேகப்படுகிறார். சஞ்சனாதான் கொலை செய்திருக்க வேண்டுமென்று அனந்திகாவும், அதேபோல அனந்திகாதான் கொலை செய்திருக்க வேண்டுமென்று சஞ்சனாவும் இப்படி ஒருவருக்கொருவர் சந்தேப்படுகிறார்கள். உண்மையில் சாண்டியை கொலை செய்தது யார் என்பதுதான் கதை. இப்படி அதிர்வூட்டுகின்ற ஒரு துப்பறிதல் கதையை நகைச்சுவையாக சொல்லி வந்த இயக்குநர் பாண்டிராஜ், உச்சக்கட்ட காட்சியில் சமுதாய சிந்தனையுடன் படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்கது. ஜெயராமனின் எதார்த்தமான நடிப்பும் தமிழின் உச்சரிப்பும் கதாபாத்திரத்துக்கு துணைபோகிறது. எளிமையான நடிப்பில் உயர்ந்திருக்கிறார். குறிப்பாக தங்கையின் சாவுக்கு வந்த ஜெயராமனின் தவிப்பும் பதட்டமும் பார்வையாளர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிட்டார். சாவு வீட்டுக்கு காரில் வந்திறங்கிய ஊர்வசியின் அலப்பறை அலாதியானது. படத்தின் பெரும்பகுதி ஊர்வசியின் நகைச்சுவைதான். யோகிபாபு வீணடிக்கப்பட்டுவிட்டார். மிஷ்கின் காவல்த்துறை ஆய்வாளரின் வேடத்துக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார். தற்காலத்து ஆய்வாளர்களின் உடல் எடைக்கு பொறுத்தமானவராகத்தான் இயக்குநர் பாண்டிராஜ் இவரை தேர்வு செய்திருப்பார் போலிருக்கிறது. ஆனால் ஒரு ஆய்வாளரின் சமுதாயக் கடமை எது? என்பதை உச்சக்கட்ட காட்சியில் இயக்குநர் பாண்டிராஜ், மிஷ்கின் மூலம் தெளிவுபடுத்திவிட்டார். பிரதீப் இ ராகவின் படத்தொகுப்பு,  திரைக்கதையின் ஓட்டத்திற்கு சீராக பாதையை செப்பனிட்டு இருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தங்களது சேவையை சரியாக செய்து முடித்திருக்கிறார்கள். போதையில்லாத உலகம் உருவாக,  இயக்குநர் பாண்டிராஜின் போதனைதான் சரியானது