கேரளாவில் தேர்வான, தமிழ் குறும்படம் “மரம் மரங்கொத்தி”.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கேரள அரசின் 18வது சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவில் நிசாந்த் மாசிலாமணி தயாரிப்பில், டார்வின் அன்ன குமாரின் இயக்கத்தில் உருவான “மரம் மரங்கொத்தி” எனும் குறும்படம் தேர்வாகி, திரையிடப்பட்டது. இரண்டு வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை, பிரிவு மற்றும் நம்பிக்கைகளை பேசக்கூடிய இப்படம், விழாவில் பங்கேற்றுள்ள படைப்பாளிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றுள்ளது.