“பேட்ரியாட்” திரைப்படத்தில் முன்னணி நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு பதாகை பெண்கள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தின் முக்கிய பெண் கதாபாத்திரங்களின் பதாகைகள் வெளியிடப்பட்டன. இதில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் பதாகை ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா முக்கியமான மற்றும் வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ரேவதி, கிரேஸ் ஆண்டனி, கீதீ சங்கீதா, ஸ்ரீ பார்வதி, தர்ஷனா ராஜேந்திரன் மற்றும் செரின் ஷிஹாப் ஆகியோரும் நடித்துள்ளனர்.********
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகும் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தில் மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா மற்றும் ராஜீவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள சினிமாவின் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படம் 2026 ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் கிச்சப்பு பிலிம்ஸ் நிறுவனங்களின் சார்பில் ஆண்டோ ஜோசப் தயாரிக்கும் இந்த படம், மலையாள சினிமாவில் சர்வதேச தரத்தில் உருவாகும் மிகப்பெரிய ஸ்பை த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. மக்கள் தொடர்பு : யுவராஜ் விநியோகம்: (Aan Mega Media) ஆன் மேகா மீடியா

