ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்கும் படம் ‘அமரன்’

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ்இணைந்து தயாரிக்கும் படம்அமரன்‘. கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணைதயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த்வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதியஇந்தியாஸ் மோஸ்ட்ஃபியர்லெஸ்தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.********

எழுதிஇயக்கும் ராஜ்குமார் பெரியசாமி, நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு, கவனமாகஅமரன்திரைப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார், இது நிச்சயமாக தமிழ் மற்றும் இந்திய சினிமாவரலாற்றில் ஒரு சாதனையை நிகழ்த்தும்! தமிழ்த் திரை நட்சத்திரமான சிவகார்த்திகேயன், நிஜவாழ்வின்நாயகனான ஒருவரின், தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று, அட்டகாசமான நடிப்பைவழங்கியிருக்கிறார். மேலும், மிகுந்த திறமைசாலியான சாய் பல்லவியுடன் அவர் இணைந்துநடித்திருக்கிறார். சாய் பல்லவி, இந்தப் படத்திற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்.

அமரன்திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், சண்டைக்காட்சி இயக்குனர் ஸ்டீஃபன் ரிச்டர், உடைவடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில்இடம்பெற்றுள்ளார்கள்.

சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுகு திரையுலகில் தங்கள் முதல்தயாரிப்பானமேஜர்மூலம் மிகுந்த புகழ்பெற்றவர்கள்,இப்போதுஅமரன்திரைப்படத்தின் மூலமாகதமிழ்த் திரையுலகில் நுழைகிறார்கள். இந்தப் படமும் இந்தியாவையும் அதன் கதாநாயகர்களையும்கொண்டாடும் விதமாக அமைந்து, உலகெங்கும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில்சந்தேகமே இல்லை.

RKFI நிறுவனத்தின் 50-வது படமானவிக்ரம்‘ 2022-ஆம் ஆண்டு, திரையுலகில் சூறாவளியாக நுழைந்து, மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் 51-வது முயற்சியானஅமரன்திரைப்படமும்வெற்றிகரமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டைக்காட்சிகளும், உணர்வுபூர்வமான காட்சிகளும் மிகச்சரியான கலவையாக அமைந்திருக்கும்அமரன்திரைப்படம் பற்றிய அடுத்த அறிவிப்புகளுக்குக் காத்திருங்கள். இறுதிக் கட்ட படப்பிடிப்பில்இருக்கும் இந்தப் படம் 2024-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் உலகெங்கும் உள்ளதிரையரங்குகளில் வெளியாகும்.