தங்க முகையதீன்
———–
தாம்பரம் மாநகரத்தை போதைப்பொருட்கள் இல்லா நகரமாக மாற்றுவதற்காக தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அபின் தினேக்ஷ் மோதக், அறிவுறுத்தலின்படி கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கான வழிக்காட்டு நெறிமுறைகளை, தமிழ்நாடு உள்துறை அமைச்சகத்தில் இருந்து வந்த, போதைப் பொருள் தடுப்புக் குழுவின் அதிகாரிகள், கல்சிங் மற்றும் சரவணகுமார் ஆகியோர் எடுத்துரைத்துனர். இக்கூட்டத்தில் தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், தலைமையாசிரியர்கள், ஒருக்கிணைப்பாளர்கள், மற்றும் ஆசிரியர்கள் என சுமார் 105 நபர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஆலோசனைக் கூட்டத்தில், போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அடையாளம் காணுதல், கையாளுதல் மற்றும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவர உதவுதல் ஆகியவற்றுக்கான வழிமுறைகளை வல்லுநர்கள் வழங்கினர் மற்றும் போதை பொருள் சம்மந்தமாக மேற்கொள்ளப்படும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது

