“ட்ரெயின்” படத்தின் இசை வெளியீட்டு விழா

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின்  படத்தின் இசை  மற்றும் காணொளி வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் விஜய் சேதுபதி  பேசு தமிழில் கூறியதாவது: “இந்த படம் எப்போது  வருமென்று காத்துட்டு இருந்தோம்.  தானு சார் ஆகஸ்ட் மாதம் கொண்டு வரும் என்று சொன்னார்.  நான் இளநிலை நடிகராக நடித்தேன். நான் கதாநாயகனாக ஆனபிறகு  என்னை கூப்பிட்டார்.  கொஞ்சம் சைக்கோ மாதிரி இருப்பார்.  நான் தேதி இல்லையென்று சொல்லிட்டு வந்துட்டேன்.  சைக்கோ படம் பார்த்ததுக்கு அப்புறம் இவரை எனக்கு ரொம்ப புடிச்சது.  சைக்கோ படம் பார்த்து முடிச்சுட்டு மிஷ்கின் கிட்ட எட்டு மணி நேரம் பேசினேன்.  எனக்கு ஒரு வாட்ச்  கொடுத்தார்.  பிசாசு 2 படத்தில் இரண்டு நாள் வேலை பார்த்தேன். அதற்கு பிறகுதான் “ட்ரெயின்”  படத்தில் நடித்தேன். படபிடிப்பு தளம்  கலகலப்பாக இருக்கும். மிஷ்கின் சார் நல்ல நடிக்கிறவங்களுக்கும் நல்லா வேலை செய்கிறவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் பரிசாக கொடுத்தார்.*******

அதனால எல்லோரும் சந்தோஷமா வேலை செஞ்சாங்க இவரை சுத்தி இருக்குற எல்லாருக்கும் சந்தோஷமா வச்சு பாரு அறிவு அன்பு இரண்டையும் பகிர்ந்து கொள்வார்கள் இந்தப் படம் உங்களுக்கு திர்லரா இருக்கும் ஆனா எனக்கும் மிஷ்கின் சார்க்கு ரொம்ப ரொமான்டிக் ஐ லவ் யூ மிஷ்கின் சார் என் கூட அடிச்சா எல்லாருக்கும் ரொம்ப நன்றி எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க. என்று பேச்சு தமிழில் பேசினார்.

*தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு* அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும் நான் கதை கேட்பேன் இந்த படத்திற்கு நான் கதை கேட்கவே இல்லை. இந்த படம் கால தாமதம் ஆனதற்கு நான் காரணம் இல்லை. இந்தப் படத்திற்கு தான் முதல் முறையாக பெரிய 8 கம்பார்ட்மென்டம் அமைத்திருக்கிறோம்.  விஜய் சேதுபதி அயராது உழைத்தார். மனிதநேயத்தின் மறுபக்கம் உள்ளவர் அதிகமான அறிவு கொண்டவர். நாசர் மிக அடிமையாக நடித்திருக்கிறார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும். 63 நடிகர் நடிகைகள் நடித்திருக்கிறார்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

*மிஷ்கின்* நந்தலாலா கதை சொல்லும் போது தானு சார் மீட் பண்ணினேன் ஆனா சார்க்கு கதை ஒண்ணுமே புரியல ஆனால் விக்ரமுக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சது பட் எங்களால் அப்பொழுது ஒன்னா சேர்ந்து படம் பண்ண முடியல அது எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு அதற்கு பிறகு தான் தானு சாரை மீட் பண்ணி ஒரு கதை பண்ணலாம்னு சொன்னேன் அவன் விஜய் சேதுபதி வைத்து பண்ணலாமுன்னு சொன்னார் விஜய் சேதுபதி என்கூட ரெண்டு நாள் வொர்க் பண்ணி இருக்காரு ஒரு பத்து வருடத்திற்கு முன்னாடி நான் அவருக்கு நோ சொல்லிட்டு அதுக்கப்புறம் பெரிய நடிகராக வளர்ந்துட்டாரு என்னுடைய சைக்கோ படம் பாத்துட்டு என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார் விஜய் சேதுபதி அவரை மிக சிறந்த மனிதனாக நான் பார்த்தேன் இந்தப் கதையை எழுதும் போது விஜய் சேதுபதிக்காக நான் பார்த்து பார்த்து எழுதினேன் இந்தப் படத்தை விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் பண்ணி இருக்கவே முடியாது கமல் சார் கூட பண்ணிருக்க முடியாது விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி என்னோட படத்தை பத்தி நான் பெருமையா பேசல படம் நல்லா இல்லைனா என்னை செருப்ப கழட்டி அடிங்க விஜய் சேதுபதி நடிப்பை என்னால மறக்கவே முடியாது எல்லாமே முதல் டேக் ஓகே பண்ணிட்டாரு ஒரு காட்சி ஒரு டைம் சொன்னாலே அதை புரிஞ்சு மனசுல இருந்து நடிக்சு முடிச்சுருவாறு நான் நாசர் நரேன் கூட ஒர்க் பண்ணி இருக்கேன் ஆனால் விஜய் சேதுபதி நடிக்க வைத்தது எனக்கு மிகப்பெரிய சந்தோசம் நான் பெருமைப்படுகிறேன் தானு சார்க்கும் ரொம்ப நன்றி உங்க மேல மிகப்பெரிய நம்பிக்கை இருக்கு பிசாசு 2 தயாரிப்பாளருக்கும் என்னுடைய நன்றி அந்தப் படம் வரும் அதுக்காக நான் காத்திருப்பேன் சினிமா அப்படித்தான் இருக்கும் தானு சாருக்கு ரொம்ப நன்றி உங்க காலத் தொட்டு வணங்குகிறேன் இளையராஜா போன்று சுறுசுறுப்பான மனிதராக உங்களைப் பார்க்கிறேன் ரொம்ப நன்றி.