விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது

நடிகர் *விஜய் சேதுபதி* முதன்முறையாக இயக்குனர் *மிஷ்கினுடன்* கைகோர்த்து உள்ளார்கலைப்புலி. எஸ்.தாணு* இந்த ட்ரெயின் படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது, எனவே*ட்ரெயின்  என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக *விஜய் சேதுபதி* வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார், மேலும் அவரது தோற்றத்திற்காக நிறைய மாற்றங்களைச் செய்துள்ளார்.*டிம்பிள் ஹயாதி* அழுத்தமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .இப்படத்தில் *ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன்அருண், ராச்சல் ரபேக்கா* மற்றும் பலர் நடிக்கிறார்கள்.*******

தனது இசைத்திறமையை வெளிப்படுத்தி வரும் இயக்குனர் *மிஷ்கின்* இப்படத்திற்கும் இசையமைக்கிறார். *பௌசியா பாத்திமா* ஒளிப்பதிவு செய்ய, *ஸ்ரீவத்சன்* படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை*V.மாயபாண்டி* மேற்கொள்கிறார்.

*ட்ரெயின் (Train)* படத்தின் படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர்வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளிராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அண்புச்செழியன் ,
கல்யாணம் (Knack Studios) ஆகியோர் கலந்து கொண்டனர்.

*நடிகர்கள்:*விஜய் சேதுபதி டிம்பிள் ஹயாதி ஈரா தயானந்த் நாசர் வினய் ராய் பாவனா சம்பத் ராஜ் பப்லு பிருத்விராஜ் கே.எஸ்.ரவிக்குமார்* செல்வா சந்திரசேகர் யூகி சேது கணேஷ் வெங்கட்ராமன் கனிஹா தியா சீதிபள்ளி சிங்கம் புலி  ஸ்ரீரஞ்சனி அஜய் ரத்னம் திரிகுன் அருண் ராச்சல் ரபேக்கா

*தொழில்நுட்ப குழு:* இயக்கம் மற்றும் இசை: மிஷ்கின் தயாரிப்பாளர்:  கலைப்புலிஎஸ் தாணு நிர்வாக தயாரிப்பு  : எல்.வி.ஸ்ரீகாந்த் ஒளிப்பதிவு: பௌசியா பாத்திமா படத் தொகுப்பு: ஸ்ரீவத்சன் கலை இயக்குனர்: வி.மாயபாண்டி ஆடை வடிவமைப்பாளர்: ஷைமா அஸ்லாம் படங்கள்: ஜெ.ஹரிசங்கர் ஒலி வடிவமைப்பாளர்: ஜெஸ்வின் மேத்யூ நிர்வாக தயாரிப்பாளர்: ஆர். உதயகுமார் தயாரிப்பு நிறுவனம்: வி கிரியேஷன்ஸ் மக்கள் தொடர்பு : *ரியாஸ் K அஹ்மத் (V4U மீடியா), சதீஷ் (AIM)*