“வாணவேடிக்கை” திரைப்படம் பூஜையுடன் துவங்கியது

சண்முகப்பாண்டியன் விஜயகாந்த் நடிக்கும் புதிய படம் “வாணவேடிக்கை”. இப்படம் பூஜையுடன் தொடங்கியது. பிரேமலதா விஜயகாந்த் கேமரா ஆன் செய்ய, தயாரிப்பாளர் எல் கே சுதீஷ் எம்.பி.யின் மனைவி பூர்ண ஜோதி  கிளாப் அடிக்க முதல் காட்சி படமாக்கப்பட்டது. இப்படத்தை திரு இயக்குகிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குனர் சுசீந்திரன், ஜெயம் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரவணன், இயக்குனர் தமிழ், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, கலை இயக்குனர் கிரண், ஜெயப்பிரகாஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், கும்கி அஸ்வின், சாரா, படூர் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.*******

இப்படத்திற்கு அர்வி ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைக்கிறார். கலை இயக்கம் ராஜ்கமல், படத்தொகுப்பு பிரேம்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையில் நடைபெற உள்ளது.. இப்படத்தைப் பற்றி இயக்குனர் திரு கூறுகையில்..இதுவரை நீங்கள் பார்த்திடாத சண்முக பாண்டியன் விஜயகாந்தை இந்த படத்தில் பார்ப்பீர்கள்.. இப்படம் தந்தைக்கு மகனுக்குமான உணர்வை சொல்லும் ஒரு அழகிய கமர்சியல் படம் என்றவர் படத்தைப் பற்றிய மற்ற அறிவிப்புகளை படபிடிப்பு முடிந்தவுடன் அறிவிக்கிறோம் எனக் கூறினார்..