மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில்: தங்கம் குழுமத்தின் இயக்குனர்கள் பங்கேற்பு!

சென்னை 7, மே:- 2021ம் ஆண்டு நடைப்பெற்ற, தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து திமுக தலைவரும் அக்கட்சியின் சட்டமன்ற தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், ஆளுநர் இல்லத்தில் நடைப்பெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தங்கம் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான ஷேக்மைதீன் தங்கம் மற்றும் இணை நிர்வாக இயக்குனர் அப்துல்சலாம் தங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.