ரஜினிகாந்துக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து

பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரஜினி காந்துக்கு இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நண்பர்களாகவும் இருவீட்டு குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வகையிலும் நட்போடு பழகி வரும் இருவரும் அவ்வப் போது சந்தித்துக் கொள்வதுண்டு. இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ரஜினிக்கு அபூபக்கர் வாழ்த்து தெரிவித்து ள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து இருவரும் விரைவில் சந்தித்து பேச இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பிறந்த நாள் முதல் திரை யுலகிலும் அரசியலிலும் கொடிகட்டிப் பறப்பதற்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக இந்திய ஹஜ் அசோஷியேன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்