சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படம் ‘பவர் பேட்டா’

சந்தீப் கிஷன், கிருஷ்ண சைதன்யா, விஜய் சில்லா, சசி தேவி ரெட்டி 70 எம்.எம்.என்டர்டெய்ன்மென்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் புதிய திரைப்படம் ‘பவர் பேட்டா’. இப்படத்தை கிருஷ்ண சைதன்யா இயக்குகிறார். இப்படத்தின் பதாகையில் ரத்தத்தில் தோய்ந்த சதுரங்க பலகை இடம் பிடித்துள்ளது. இது வியூகம், சக்தி மற்றும் தியாகம் ஆகியவற்றின் ஒரு உன்னதமான ஒரு பக்கமாகும். அந்த சதுரங்க விளையாட்டு காய்கள் உடைந்தும் விழுந்தும் அல்லது ஒரு விதமான வெற்றியின் தருவாயில் நிற்பது போன்றும் தோன்றுகின்றன. அதே சமயம் வன்முறையால் கறைபட்டு நசுக்கப்பட்ட ஒரு ரோஜா மலர் அந்த குழப்பங்களுக்கு மத்தியில் இடம் பிடித்திருக்கிறது. இந்த காட்சி படத்தின் மைய கரு பொருளான காதல் – கௌரவம் – அரசியல்-  ஆகியவற்றுக்கான குரலாக ஒலிக்கிறது. உணர்ச்சிகளும், அதிகாரப் போராட்டங்களும் மோதும்… ஒவ்வொரு அசைவிற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டிய தீவிரமான கதை களத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது.******

தொழில்நுட்பக் குழு:  எழுத்து & இயக்கம் : கிருஷ்ண சைதன்யா. தயாரிப்பாளர்கள் : விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி  தயாரிப்பு நிறுவனம் : 70 MM என்டர்டெய்ன்மண்ட்ஸ்  இசை : மனி ஷர்மா ஒளிப்பதிவு : மதி  படத்தொகுப்பு  : ஸ்ரீகர் பிரசாத் தயாரிப்பு வடிவமைப்பு : ராமகிருஷ்ணா & மோனிகா ஒளி வடிவமைப்பு : சச்சின் சுதாகரன் &ஹரிஹரன் மக்கள் தொடர்பு : யுவராஜ்.