“அந்தரன்” திரைப்பட விமர்சனம்

மு.கி.சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், கதையின் நாயகன்பிரஜன், கதையின் நாயகி இவானா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “அந்தரன்”. நாயகி இவனாவுக்கு அவரின் பெற்றோர்கள் மாப்பிள்ளை தேடுகிகிறார்கள். ஆனால் இவானா திருமணம் வேண்டாமென்று கூறுகிறாள். பிறகு பெற்றோர்களின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.. திருமண நிச்சயதார்த்தம் நடந்த சில நாட்களிலேயே மாப்பிள்ளை மர்ம்மான முறையில் கொலை செய்யப்படுகிறார். மீண்டும் வேறொரு மாப்பிள்ளயோடு இவானுக்கு நிச்சய்தார்த்தம் நடைபெறுகிறது. அதுநடந்த சில நாட்களிலேயே அந்த மாப்பிள்ளையும் மர்மமான முறையில் கொலை செய்யப்புடுகிறார். அதைத் தொடர்ந்தும் மகளுக்கு மாப்பிள்ளை தேடி திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. அவரும் சில நாட்களிலேயே கொலை செய்யப்படுகுறார். இந்த கொலைகளை யார் செய்வது என்பதை கண்டுபிடிக்க காவல்துறை கண்காணிப்பாளர் பிரஜன் துப்பறிகிறார். விசாரணைக்கு வரும் இவானாவை காவல்த்துறை அதிகாரி பிரஜன் காதலிக்க தொடங்குகிறார். இவர்களின் திருமணம் நடந்ததா? இவானவுக்கு நிச்சயம் செய்து வைத்திருந்த மூன்று மாப்பிள்ளைகளையும் கொலை செய்தது யார்? எதற்காக கொல்லப்பட்டார்கள் என்பதுதான் கதை.

போலீஸ் அதிகாரியாக வரும் பிரஜின், அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார். விசாரணை காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார். நாயகியாக நடித்திருக்கும் இவானா வருண் கதையின் மையமாக வருகிறார். பயம், குழப்பம், பதற்றம் என பல உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகியின் பெற்றோர்களாக வரும் எம்.கே. சாம்பசிவம், செந்தி குமாரி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

தொடர் கொலை, மர்மம், விசாரணை என வழக்கமான  கதையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சந்தோஷ் ராவணன். திரைக்கதையில் அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்துகிறது. குறிப்பாக உச்சக்கட்ட காட்சி வரை கொலையாளி யார் என்பதை யூகிக்க முடியாத வகையில் காட்சிகளை அமைத்திருப்பது படத்தின் பெரிய பலம். அதே நேரத்தில், சில கதாபாத்திரங்களின் பின்னணி முழுமையாக சொல்லப்படாததும், சில அத்துமீறல்களும் இருக்கின்றன. இருந்தாலும் அவை படத்தின் விறுவிறுப்பை பெரிதாக பாதிக்கவில்லை. கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு, ஹரி.எஸ்.ஆர் பின்னணி இசை இரண்டுமே படத்தின் மர்மத்தின் உணர்வுக்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ஒரு அறுமையான துப்பறியும் நாவலை திரைப்படமாக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ் ராவணன்.