கவின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பு தொடக்க விழா நடைபெற்றது. ராம் சங்கையா இயக்கத்தில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை’ படத்தில் கவின் கதையின் நாயகனாக நடிக்க.. அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நடிக்கிறார். ஆர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ஜி.மதன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள எம். கதிரவன் மதி கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகும் இந்த திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கிறார். இணை தயாரிப்பு ஏ.வெங்கடேஷ். இத்தொடக்க விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, இயக்குநர் கதாசிரியர் நடிகர் தமிழ், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, இயக்குநர் ஆன்ட்ரூ லூயிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.*****
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கிளாப் அடித்து படத்தின் பாரம்பரிய படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். பிரின்ஸ் பிக்சர்ஸ் – ராம். சங்கையா – கவின்- சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி – ஆர். வேல்ராஜ்- ஜஸ்டின் பிரபாகரன் கூட்டணியில் உருவாகும் ‘பேர் சொல்லும் பிள்ளை ‘ – ரசிகர்களாலும், திரையுலகினராலும் கொண்டாடக்கூடிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

