90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் எஸ்.ஜி.சரவணன் தயாரிப்பில் இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், காளி வெங்கட், ரம்யா பாண்டியன், வி டி வி கணேஷ் , ஜான் விஜய், பேபி கிருத்திகா, ‘பருத்திவீரன்’ சரவணன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் சக்திவேலன் வழங்குகிறார். எதிர்வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் அருள்நிதி பகிர்ந்து கொண்டதாவது: இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து விவரித்திருக்கும்- பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். ” என்றார்.
நடிகர் ஆரவ் பகிர்ந்து கொண்டதாவது: ”இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன பிறகு, இதுபோன்ற கதாபாத்திரம் திரையுலக பயணத்தில் எனக்கு மீண்டும் அமையுமா? என தெரியாது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் காளி வெங்கட் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த காட்சிகளில் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன்” என்றார்.

