துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்” திரைப்படத்தின் காணொளி வெளியாகியுள்ளது. துல்கர் சல்மானின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கிய இந்த திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. துல்கர் சல்மானின் வேபேரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ளார். இப்படத்தை துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர். துல்கர் சல்மானுடன் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாது லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.*******
தொழில்நுட்ப குழு விவரங்கள்: லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித் இசை: ஜேக்ஸ் பிஜாய் எடிட்டிங்: சமன் சாக்கோ தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன் தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர் உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன் உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர் பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார் VFX : தௌஃபீக் (எக்வொயிட்) (Eggwhite) போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட் ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன் மக்கள் தொடர்பு : யுவராஜ்

