நானியின் உலகளாவிய திரைப்படமான ‘தி பாரடைஸ்’- இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக படிப்படியாக வளர்ந்துள்ளது. அதன் ஒவ்வொரு விளம்பர அறிவிப்பும் அமோகமான வரவேற்பை பெற்று வருகிறது. அதன் பிரமிக்க வைக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – தாக்கத்தை ஏற்படுத்தும் கிளிம்ப்ஸ்- வெற்றி பெற்ற பாடலான ‘ஆயா ஷேர்’ … என இப்படம் தொடர்ந்து எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா தனது கற்பனையை ஒரு பிரம்மாண்டமான தளத்தில் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் தயாரிப்பாளர் சுதாகர் செருகூரி- எஸ் எல் வி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை அதன் மிகப்பெரிய லட்சியத்திற்கு ஏற்ப அயராது உழைத்திருக்கிறார். ‘நரகம் கட்டவிழ்த்து விடப்பட்டு, நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது’ என்ற வாசகத்துடன் இப்படத்தின் அதிரடியான டீசரை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.**********
தொழில்நுட்ப குழு : எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஒடேலா தயாரிப்பாளர் : சுதாகர் செருகூரி தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ் – SLV Cinemas ஒளிப்பதிவு : சி ஹெச் சாய் இசை : அனிருத் ரவிச்சந்தர் படத்தொகுப்பு : நவீன் நூலி தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா மக்கள் தொடர்பு : சதீஷ்குமார் ( S2 மீடியா) மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

