குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’

தண்டர் மீடியா  கண்மணி ரங்கநாதன் மற்றும் எல்.வி.என்டர்டேன்மெனட் வெங்கல் எம். லிங்கேஸ்வரன் இணைந்து தயாரிக்கும் பாரிஸ் கஃபே படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் குரு சோமசுந்தரம்  மற்றும் அனுமோல் நடித்துள்ளனர். மேலும் அர்ச்சனா குமார், விஜய் விஸ்வா, சாய் விக்கி, நயனா, பிபின் மற்றும் பலர்  நடித்துள்ளனர். சராஜ் சீலன்  இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இசையமைப்பாளர் கே இசையமைத்துள்ள இந்த படத்திற்கு சதீஷ் ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேசிய விருதை வென்ற விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார். ***********

படத்தின் தயாரிப்பாளர் கண்மணி ரங்கநாதன் அவர்கள் பேசும் போது, பாரிஸ் கஃபே ஒரு ஸ்மால் பட்ஜெட் படம் ஆனா ஒரு ஸ்ட்ராங் மெசேஜ் இருக்கு நம்ம சமுதாயத்தில்  நடக்குற முக்கியமான விஷயம் பத்தி பேசுற படம். குரு சோமசுந்தரம் மற்றும் அனுமோல் இந்தப் படத்தில் இருப்பது எங்களுக்கு பெருமையாக உள்ளது. படத்தின் இயக்குனர் என்னுடைய கணவர் 20 வருடமா முயற்சி செய்கிறார் ஆனா சூழ்நிலை அவருக்கு  இயக்குநராக விடல அது நான்தான். இந்தப் படத்துக்காகவும் நிறைய புக் ரிசர்ச் பண்ணி இருக்காரு. என்னுடைய கணவரை நினைத்தால் எனக்கு பெருமையா இருக்கு” என்றார்.

படத்தின் இயக்குனர் சராஜ் சீலன் அவர்கள் பேசும்போது, என்னுடைய சினிமா வாழ்க்கை ஆறு வயதில் ஆரம்பித்தது, என்னுடைய அப்பா தான் எனக்கு சினிமா கற்றுக் கொடுத்தார், வாரம் தவறாமல் படங்களை பார்ப்போம், படிச்ச ஸ்கூல் வாசல்ல ஐந்து தியேட்டர் இருக்கும். வகுப்பறையில் ரஜினி கமல் பற்றிதான் அதிகமா பேசுவோம் சினிமாலாம் எங்களுடைய பேச்சு. பாரதிராஜா பாலச்சந்தர் பாலுமகேந்திரா பாக்கியராஜ் இவங்க தான் எனக்கு ரொம்ப புடிச்ச இயக்குனர்கள். நான் பாக்யராஜ் சார்-ஐ இந்த படத்துக்கு  கூப்பிடனும்னு நினைச்சா அவரு இப்ப இல்ல அது ரொம்ப கஷ்டமா இருக்கு. உங்க அப்பாக்கு கலைத்துறையில் ரொம்ப ஆர்வம் அவரும் மூலமா தான் நான் எல்லாமே கத்துக்கிட்டேன். நான் சினிமாவை படித்து தான் கத்துக்கிட்டேன். ஒரு நிமிட ஷார்ட் பிலிம் என்னோட பொண்ணை வைத்து எடுத்தேன் அந்தப்படம் செலக்ட் ஆனதும் என்னுடைய பார்வை ரொம்பவும் பெரிதா மாறியது அதற்குப் பிறகு எல்லாமே சினிமா தான் என்று முடிவு செய்தேன். குரு சோமசுந்தரம் கிட்ட முதல் முறை கதை சொன்னதும் அவர் ரொம்ப நல்லா இருக்கு நானே பண்றேன் என்று சொல்லிட்டார் அவர் கூட பயணித்தது எனக்கு சந்தோசமா இருக்கு ரொம்ப நன்றி குரு சார். அனுமோல் கிட்ட போன்ல தான் கதை சொன்னேன் அவருக்கும் பிடித்து ஒத்துக்கிட்டாங்க அதற்கும் நன்றி. படத்துல நடிச்ச நடிகர் நடிகைகள் எல்லாரும் ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றி. சாபு இந்த படத்துக்கு ஒரு முக்கியமான பில்லர் நான் சொன்னதை ரொம்ப அருமையா பண்ணி கொடுத்தார். கலை இயக்குனரின் உழைப்பு ரொம்ப முக்கியமானது அவருக்கும் என்னுடைய நன்றி. இசையமைப்பாளர் கே அவர்களுக்கும் என்னுடைய நன்றி.” என்றார்.