தாம்பரம் மாநகரில் அனாதையாக சுற்றித் திரியும் தெரு நாய்களை பராமரிக்க காப்பகம் கட்டப்படும் என்று தாம்பரம் மாநகராட்சியின் ஆணையர் எஸ்.பாலசந்தர் இ.ஆ.ப. தெரிவிதார். தாம்பரம் மாநகராட்சி கணக்கீட்டின் படி, 46,286 தெருநாய்கள் மற்றும் 4000 முதல் 5000 வரை வீட்டு வளர்ப்பு நாய்கள் உள்ளன என்று தெரிவித்த ஆணையர், உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி குறைந்த பட்சம் 70 வதிலிருந்து 90
சதவீத நாய்களுக்குக் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும்பட்சத்தில் நோய் கிருமி தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும் என்று தெரிவித்தார். தாம்பரம் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடைத்துறை இணைந்து மனித மற்றும் விலங்கு நலனைக் கருத்தில் கொண்டு தெரு நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஆணையர், நாய்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோயை தடுக்க முடியும் என்றும் நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ரேபிஸ் பரவுவதைத் தடுக்க முடியும் என்றும் ரேபிஸ் நோயால் நாய்களுக்கு ஏற்படும் இறப்பைக் குறைக்க முடியும் எனவும், இதனால்
நாய்கள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்பான மற்றும் இணக்கமான சகவாழ்வை ஊக்குவிக்க முடியும் என்றும் மேலதிகமான விளக்கத்தை ஆணையர் தெரிவித்தார். அத்துடன் தாம்பரம் மாநகரில் அனாதைகளாக சுற்றித்திரியும் தெரு நாய்களை அதுவும் ஓர் உயிரினம் என்பதால் அவைகளை பராமறிக்க காப்பகங்கள் அமைக்கப்படும் என்றும் தாம்பரம் மாநகராட்சியின் ஆணையர் எஸ்.பாலச்சந்தர் இ.ஆ.ப. தெரிவித்த்குள்ளார்.
மக்களுக்கான வேண்டுகோள்
தங்கள் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை அருகிலுள்ள முகாம்களுக்கு அழைத்து வந்து தடுப்பூசி செலுத்துமாறு, தாம்பரம் மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இதன் மூலம் நாம் அனைவரும் நோயில்லாத சகவாழ்வு சமூகத்தை உருவாக்க முடியும். இம்முகாம் ஆகஸ்ட் 8ம் தேதிமுதல் செப்டம்பர் மாதம் முதல் இரண்டு வாரம் வரை (அலுவலகநாட்களில்) 25 நாட்களுக்கு இலவசமாக ARV தடுப்பூசி செலுத்தப்படும். இதன் பொருட்டு 31.08.2025 அனைத்து 5 மண்டலங்களிலும்தொடங்கப்பட்டு 23711 தெரு நாய்கள் (ம) வீட்டு நாய்களுக்கு இதுவரை வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது என்பதனை இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.என்று மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

