ஏ.கே.பிலிம் ஃபேட்ரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் “இம்மார்டல்”. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் மிகப் பெரிய பாராட்டுக்களைக் குவித்து, பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் படக்குழுவினர், திரையுலக பிரபலங்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட வெற்றி விழா உற்சாகமாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜிவி பிரகாஷ் மற்றும் விநியோகஸ்தர் சக்திவேலன் முதலானவர்களுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தார் மேலும் நடிகர் ஜிவி பிரகாஷுக்கு ஆர்.எக்ஸ்.100 திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பரிசளித்தார்.*******
நடிகர் ஜிவி பிரகாஷ் பேசியதாவது. “படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. “இம்மார்டல்” டிரெண்டிங்கில் வருவதைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது. வெள்ளிக்கிழமை சிறிய திரைகளில் தொடங்கி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரிய திரைகள், கூடுதல் காட்சிகள் என படத்தின் ஷோகேசிங்கை மிகச்சிறப்பாக செய்த சக்தி சாருக்கு நன்றி. இந்தப் படத்தை என்னிடம் முதலில் கொண்டு வந்த எடிட்டர் ஷான் லோகேஷுக்கு நன்றி. முதல் முறையாக ஒரு படத்தை தயாரிக்கும் அருண்குமார் சார், CG பணிகளுக்காக நீண்ட காலம் காத்திருந்து, படத்தின் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் பொறுமையாக இருந்தார். அவருடைய அந்தப் பொறுமைக்கும், நம்பிக்கைக்கும் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. அதேபோல், படத்தின் புரமோஷன் மற்றும் போஸ்டர் டிசைனில் சிறப்பாக பணியாற்றிய கோபி பிரசன்னா சார் மற்றும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரிய நன்றி. என்றார்.
தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் பேசியதாவது..,“இம்மார்டல்” திரைப்படம் வித்தியாசமான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள படம். சிஜி உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களை சிறப்பாக உருவாக்க வேண்டும் என்பதில் படக்குழு ஆரம்பம் முதலே கவனமாக இருந்தது. அந்த முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் ஜிவி பிரகாஷுக்கு எனது நன்றி. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை ஜிவி பிரகாஷ் அளித்த ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று படத்தை புரமோட் செய்தோம். மேலும், படத்தை தமிழகத்தில் வெளியிட்ட சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் அவர்களுக்கு நன்றி. “படத்தை பெரிதாக வெளியிட வேண்டும்” என்ற தனது கோரிக்கையை ஏற்று ஆரம்பத்தில் 250-க்கும் மேற்பட்ட திரைகளில் படத்தை வெளியிட்டதுடன், படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் மற்றும் பெரிய திரைகள் ஒதுக்கப்பட்டது. குறிப்பாக சனி, ஞாயிறு நாட்களில் படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக பல திரையரங்குகளில் திரையிடல் அதிகரிக்கப்பட்டது பெரிய மகிழ்ச்சி. “இம்மார்டல்” படத்தை வெற்றிப் படமாக கொண்டு வந்த தனது ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் முக்கிய காரணம் அனைவருக்கும் நன்றி.என்றார்.
இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பேசியதாவது.., “‘இம்மார்டல்’ திரைப்படம் நிச்சயம் வெற்றிப்படமாகும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே எனக்கு இருந்தது. அது ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்லை. படத்தைப் பார்த்தபோதே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து பேசி வந்தேன். அந்த நம்பிக்கை தற்போது வெற்றியாக மாறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதை அல்லது பிரம்மாண்டமான மேக்கிங் மட்டும் போதாது. அதில் பணியாற்றும் அனைவரின் உண்மையான உழைப்பும், நேர்மறையான எனர்ஜியும் முக்கியம். இந்தப் படத்திற்காக அதிக நேரத்தையும் பொறுமையையும் செலவிட்டு பணியாற்றிய தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனுக்கு நன்றி. இப்படத்தை வெற்றிப்படமாக்கிய பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி.
இயக்குநர் மாரியப்பன் சின்னா பேசியதாவது.., எனது முதல் படமான “இம்மார்டல்” திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய ஆதரவு வழங்கிய பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றி. ஒரு அறிமுக இயக்குநராக எனக்கு கிடைத்த இந்த ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன், ஜிவி பிரகாஷ், சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன், ஸ்டண்ட் குழுவினர், VFX மேற்பார்வையாளர் மஹி, கோபி பிரசன்னா, மிக்ஸிங் பணிகளை மேற்கொண்ட ஷிவா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை உருவாக்கும் பயணத்தில் பலரும் எனக்கு உதவினார்கள், “இம்மார்டல்” படத்திற்காக உழைத்த ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது நன்றி.

