“சர்தார் 2” திரைப்பட விமர்சனம்

லோகேஷ்மன் குமார், இசான் சக்‌ஷேனா ஆகியோரின் தயாதிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா,மாளவிகா மோகனன், ஆஷிகா, யோகிபாபு, நிழல்கள் ரவி, ரஜிஷா விஜயன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்ஜும் படம் “சர்தார் 2”.  4 ஆண்டுகளுக்குமுன் வெளிவந்து வெற்றிபெற்ற சர்தார் படத்தின் 2ஆம் பாகம்தான் “சர்தார் 2”. இந்தபடத்திலும் கார்த்திக், தந்தையும் மகனுமாக இரட்டை வேடத்தில் நடித்திரருக்கிறார். சீனா  நாடு  வியாதிக் கிருமிகளை உருவாக்கி அதை  இரும்புக் குடுவைக்குள் வைத்து பல நாடுகளுக்கு அனுப்புகிறது. அதில் இரண்டு குடுவைகள் இந்தியாவில் விழுந்துவிடுகிறது. அந்த குடுவைகளை கைப்பற்றி வெடிக்க வைத்து நாட்டை அழிக்க  எஸ்.ஜே.சூர்யா திட்டமிடுகிறார். அந்த திட்டத்தை முறியடிக்க இந்திய ரகசிய உளத்துறை அதிகாரிகளான தந்தையும் மகனுமாக நடித்திருக்கும் கார்த்தி களமிறங்குகிறார்கள். எஸ்.ஜே.சூர்யாவின் திட்டத்தை கார்த்தி முறியடித்தார்களா? இல்கையா? என்பதுதான் படத்க்த்கின் மீதிக்கதை.

ரகசிய உளவாளிக்கேற்ற  நடிப்பை வழங்கி பாராட்டை பெறுகிறார் கார்த்தி, சண்டைக் காட்சிகளில் தூள் பறத்தி அவரின் ரசிகர்களுஜ்கு விருந்து படைத்திருக்கிறார் கார்த்தி. தந்தை மகன் என்ற இரு கதாபாத்திரங்களில் கலக்கி இருக்கிறார். வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா படத்துக்குப்படம் மெருகேறி வருகிறார். அவரின் உடல்மொழி பார்வையாளர்களை ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கிறது. ஆஷிகா ரங்கநாத் தனது நடிப்பு ரசிகர்களுக்கு ஆறுதலாக இருக்கிறது. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அதிரடிக் காட்சிகளாகவே விறுவிறுப்புடன் செல்கிறது. ஒரு முழுநீள ஆங்கிப்படத்தை பார்த்க்த அனுபவம் ஏற்படுகிறது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் யோகிபாபுவும் நிழல்கள் ரவியும் பேசும்  உரையாடல்கள் நகைச்சுவைக்கு போதுமானதாக இல்லை. அவர்களின் வருகையும் குறைவு நகைச்சுவையும் குறைவு. இவர்களை பயன்படுத்த இயக்குநர் தவறியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி வில்லியம் கடினமாக உழைத்திருக்கிறார். படத்துக்கு உயிர் மூச்சி கொடுத்திருபவர் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.தான். இசையின் அத்தனை வித்தைகளையும் இப்படத்தில் அவர் கையாண்டிருக்கிறார். ஆங்கிலப்பட தரத்திலான பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்றாக கலக்க  வைக்கிறது. பரபரப்பான காட்சிகள் படத்துக்கு பலம் என்றாலும் படத்தின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம். முதல் பாகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களால் ஏற்புடும் தீமைகளை எடுத்துச் சொன்ன இயக்குநர் பி.எஸ்.மித்ரன்,  இந்த இரண்டாம் பாகத்தில் பிராய்லர் (ஊசி போட்டு வளர்க்கும்) கோழிக்கறியை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகளை எடுத்துச் சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். இயக்குநர் பி.எஸ்.மித்திரனின் சமுதாய சிந்தனைக்கு ஒரு சல்லியூட் அடிக்கவேண்டும்.